search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxals"

    • சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
    • தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.

    மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக்கொலை.
    • இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

    நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று சி-60 கமாண்டோக்களுடன் நடந்த என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெரிமிலி தாலம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயும் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மகராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்டரங்கட்டா கிராமத்தின் அருகே நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 கமாண்டோக்களின் இரண்டு பிரிவுகள் உடனடியாக அப்பகுதியில் தேடுதலுக்காக அனுப்பப்பட்டன.

    பிரவுகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு சி -60 வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவரான பெரிமிலி தாலத்தின் பிரதேசக் குழு உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் கம்மாண்டர் வாசு கோர்ச்சா ஆவர்.

    அந்த இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி, கார்பைன், இன்சாஸ் துப்பாக்கி, நக்சல் புத்தகம் மற்றும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.



    இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter

    ஒடிசாவில் சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுடன் இணைந்து முதல்வர் நவீன் பட்நாயக் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
    புவனேஸ்வரம்:

    ஒடிசாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு திருந்தி வாழ வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு திருந்தி வாழ முன்வரும் மாவோயிஸ்டுகளுக்கு தேவையான உதவிகளையும் புனர்வாழ்வு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சரண் அடைந்து திருந்தி வாழ தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளை சமூகத்தின் மையநீரோட்டத்தில் இணையச் செய்யும் முயற்சியாக, அவர்களுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமர்ந்து உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார்.

    ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றபோது, சரண் அடைந்த 30 மாவோயிஸ்டுகளுடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். இவர்களில் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரண் அடைந்த மாவோயிஸ்டுகள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மால்கங்கிரி போலீஸ் சூப்பிரெண்டு, இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பேசி, முதல்வருடன் சேர்ந்து போட்டியை காண ஏற்பாடுகளை செய்திருந்தார்.



    முதல்வருடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தவர்கள், இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இது தங்களின் வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்றும், உண்மையில் தாங்கள் சமூக மையநீரோட்டத்தின் ஒரு அங்கமாக உணர்வதாகவும் கூறினர்.

    இதுபற்றி முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘இந்த இளைஞர்கள் அனைவரும் மாவோயிச பாதையை கைவிட்டு மையநீரோட்டத்திற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் நிறைய பேர் திரும்பி வருவார்கள் என நம்புகிறேன்’ என்றார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர்களில் 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்தனர். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தலை சீர்குலைப்பதற்காகவும், வன்முறை தாக்குதல்களை நடத்துவதற்காவும் நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதால் அவர்களை வேட்டையாட மாநிலம் முழுவதும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கு முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பஸ்ட்டார், நாராயணப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்தனர்.

    இந்த நடவடிக்கைக்காக சத்தீகர் மாநில முதல் மந்திரி ரமண் சிங் மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
    மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைக்கு ரூ.40 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டுக்கள் 5 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Naxals
    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் தலைக்கு ரூ.40 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தம்பதிகள் உள்பட 5 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்தனர். 

    கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட சாய்நாத், மற்றும் அவரது மனைவி சுமார் 6 தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள்.

    மேலும், போலீசாருக்கு எதிராக 10 துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலும், 6 கொலைகளில் வழக்குகளில் தொடர்புடையவருமான சுசிலா என்பவரின் தலைக்கு ரூ.6 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    9 கொலை வழக்குகளில் தொடர்புடையதால் தலைக்கு முறையே தலா ரூ.6 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த ராஜேஷ் மற்றும் மகேஷ் உள்பட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். #Naxals
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Encounter
    தும்கா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Encounter 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் உடனான என்கவுண்டரில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    மகாராஷ்ரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #DevendraFadnavis #Maoist
    மும்பை:

    சமீபத்தில் பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக வந்த தகவலை அடுத்து, நாடு முழுவதும், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, அவர்கள் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பழி வாங்கும் விதமாக, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    2 இ-மெயில்களில் வந்த கொலை மிரட்டலை அடுத்து, முதல்மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில், சிலரை கொலை செய்வதன் மூலம் எங்கள் சிந்தனையை அழிக்க முடியாது. கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு கணக்கு தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரண்டு இ-மெயில்களின் நகலை காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். #DevendraFadnavis #Maoist
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Chhattisgarh




    ராய்ப்பூர்:



    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் நவீன ரக வெடிகுண்டு மூலம் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #Chhattisgarh
    ×