என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nazareth"

    • தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 19-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது.
    • விழாவில் ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    நாசரேத்:

    தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 19-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை கடந்த 22-ந்தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் மாலையில் திருச்சபைகளின் கலைநிகழ்ச்சிகள் நாசரேத் தூயயோவான் கதீட்ரல் வளாகத்தில் நடைபெற்றது. நேற்று காலையில் ஸ்தோத்திரப்பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நாசரேத் கதீட்ரலில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளரும், கோவை திருமண்டல பேராயருமான தீமோத்தேயு ரவீந்தர் அருட்செய்தி வழங்கினார். ஆராதனை முடிந்ததும் கதீட்ரல் வளாகத்தில் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

    நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார்.

    விழாவில் ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நற்செய்தி அருட்பணித்துறை, சிறுவர் ஊழியம், வாலிபர் ஊழியம், பெண்கள் ஐக்கிய சங்கம், சமூக நலத்துறை, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், சுற்றுச் சூழல் துறை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல கல்வி நிறுவனங்களின் மேலாளர்கள், தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சபைமன்றத் தலைவர்கள், சேகரத் தலைவர்கள் குருவானவர்கள் மற்றும் திருமண் டல நிர்வாகிகள், திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
    • மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது

    நாசரேத்:

    நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மாசில்லா வரவேற்றார். மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, வார்டு கவுன்சிலர்கள் அதிசய மணி, சாமுவேல், காமா ஜெபக்குழு நிறுவனர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை 6 நாட்கள் நடைபெற்றது
    • பார்வை இழந்தோர் பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது

    நாசரேத்:

    நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை விழா 6 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் இரவு ஊரை சுற்றி ஆயத்த ஜெப பவனி நடைபெற்றது. 2-வது நாள் மாலையில் கன்வென்ஷன் கூட்டத்தில் ராஜன் அகஸ்டின் செய்தி கொடுத்தார். 3, 4-வது நாள் இரவு கூட்டங்களில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர் எட்வின் சாம்ராஜ் சிறப்பு செய்தி கொடுத்தார். 5-வது நாள் மாலை பண்டிகை ஆயத்த ஆராதனை மற்றும் ஞானஸ்தான ஆராதனை மூக்குபேறி சேகரத்தலைவர் டேனியல்ஞான பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெபராஜ் தேவசெய்தி கொடுத்தார். இரவு 9 மணிக்கு பார்வை இழந்தோர் பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    6-வது நாள் பிரதிஷ்டைப் பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை, ஆராதனையும் மூக்குப்பேறி சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரைன்ட்நகர் சேகரத் தலைவரும், ஜி.எம்.எஸ். பொதுச் காரியதசியுமான டேனியல் எட்வின் சிறப்பு செய்தி கொடுத்தார். மாலை 3 மணிக்கு அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகரத் தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்றது.
    • சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்றது.

    லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், உப தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர். தேவ செய்தி வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை பேராயரும், பிரதமப் பேராயரின் ஆணையாளருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் நாசரேத் தூய யோவான் பேராலய குருவானவர்கள் பொன் செல்வின் அசோக்குமார், மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி, கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ட்டன் ஜோசப், திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநர், செயலர் ராபின்சன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஐக்கிய விருந்து பரிமாறப்பட்டது.

    • திருச்செந்துர் கோட்டத்தி ற்குட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக் குறிச்சி, பழனியப்பபுரம் ஆகிய உபமின்நிலை யங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • எனவே அந்த பகுதியில் மின் வினியோகம் பெறும் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் மின்சார விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்துர் கோட்டத்தி ற்குட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக் குறிச்சி, பழனியப்பபுரம் ஆகிய உபமின்நிலை யங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் மின் வினியோகம் பெறும் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயர்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம, நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டு கொண்டான்மாணிக்கம்,

    நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம், அம்பலச்சேரி,

    அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, நயினார்பத்து.செட்டியாபத்து வாத்தியார் குடியிருப்பு, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, பெரிய புரம், தீதத்தா புரம், தண்டுபத்து, சிதம்பரபுரம் வட்டன்விளை சியோன்நகர், சுதந்திர நகர் நயினார்புரம் வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்ட ங்காடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளர்.

    • நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 115-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • உதவி குரு பொன்செல்வின் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார்.

    நாசரேத்:

    நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 115-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூய யோவான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் தலைமை தாங்கி ஆரம்ப ஜெபம் செய்தார். உதவி குரு பொன்செல்வின் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார்.

    இதில் சேகரசெயலாளர் செல்வின்,பொருளாளர் எபனேசர், சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜாண்சன், ஜஸ்டின், ஜான் கிறிஸ்டோபர், ஜேசன், சாம்சன் மற்றும் சபைமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் 115- வது நினைவு தினத்தை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் இசை ஐக்கிய குழு சார்பில் ஏழை, எளிய மக்கள் 278 பேருக்கு 5 கிலோ அரிசி, ½ கிலோ துவரம் பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்பு காலை, மதியம், மாலை திருமறையூர் வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    மாலையில் நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு, அதன்பின் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று இரவு உணவு வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் இசை ஐக்கிய குழுவினர் செய்திருந்தனர்.

    • மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது.
    • கன்வென்ஷன் கூட்டத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த சாம்சன் தேவசெய்தியை அருளினார்.

    நாசரேத்:

    மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது. வகுத்தான் குப்பம் சேகரம் மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன பண்டிகை நடந்தது. 2 நாட்கள் நடந்த கன்வென்ஷன் கூட்டத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த சாம்சன் தேவசெய்தியை அருளினார்.

    3-ம் நாள் பண்டிகை ஆராதனையை ஓய்வு பெற்ற குரு பொன்னுசாமி தலைமையில், சேகர குரு செல்வராஜ் முன்னிலையில் நடந்தது . இதில் சபை ஊழியர்கள் ஸ்டான்லி ஜான்சன் துரை, ஏசா வேதராஜ், சர்ச்சில், ஜாய்சன், ஸ்டீபன், ஜெபராஜ் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 4-ம் நாள் மாலை கலை நிகழ்ச்சியும், 5-ம் நாள் காலை அசன ஆயத்த ஜெபமும், அதனைத் தொடர்ந்து மாலை அசன பண்டிகையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர தலைவர்கள் செல்வராஜ், பாஸ்கரன் சபை ஊழியர் வனமோகன் ராஜன் , சபை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • முகாமில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • விழாவில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சென்னை சாய் ஜெயராஜ், ஜானகிராமன்,மணி, சிவா, பனிமேகராஜ், உள்பட பலருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நினைவுபரிசு வழங்கினார்.

    நாசரேத்:

    குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், நாலுமாவடி புது வாழ்வு சங்கமும் இணைந்து 6 ஆண்டுகளாக கோடைகால இலவச கபடி பயிற்சி முகாமினை நடத்தி வருகின்றனர்.

    6-வது ஆண்டாக இந்த ஆண்டு இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 185 பேர் முழு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள், உபகர ணங்கள் வழங்கப்பட்டது.

    இலவச கபடி பயிற்சி முகாம் நிறைவு விழா நாலுமாவடி ஏலீம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழக செயலாளர் கிரிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் நவீன்குமார், சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழக தலைவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரி ப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாண வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புரோ கபடி வீரர்களை உருவாக்க முயற்சி எடுத்துவரும் மோகன் சி.லாசரஸ் அவர்களின் சமூகப்பணி, ஆன்மீகப் பணி, விளையாட்டுப் பணி உட்பட பல்வேறு பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். இங்கு பயிற்சிபெறும் மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்றாலும் அங்கும் இங்கு பயிற்சிபெற்றதின் சிறப்பை நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். அதுதான் இந்த பயிற்சி முகாமில் நீங்கள் பங்குபெற்றதற்கான பெருமையாகும். தொடர்ந்து 12 நாட்களாக இந்த பயிற்சி முகாமில் மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளித்த அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனையும் மனதார பாராட்டுகிறேன். இப்பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் வரவேற்றார். விழாவில் பயிற்சி அளித்த பயிற்சி யாளர்கள் சென்னை சாய் ஜெயராஜ், ஜானகிராமன், அசோக், சாம்சன், தங்கவேல், மணி, சிவா, பனிமேகராஜ், முத்துகிருஷ்ணன், விஸ்வந்த், மாசானமுத்து, வேல்பாண்டி ஆகியோருக்கு அமைச்சர் நினைவுபரிசு வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார், விளை யாட்டுத்துறை ஒருங்கி ணைப்பாளர் மணத்தி எட்வின், பிசியோதெரபி பாக்யராஜ், ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் அமச்சூர் கபடி கழக இணைச்செய லாளர் கபடி கந்தன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் அருணாச்சலம், பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், வழக்கறிஞர்கள் மனோஜ், ரகுராமன், தி.மு.க. பிரமுகர்கள் பாதாளமுத்து, கார்த்திக், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மக்கள்தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • விழாவில் திரு மண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாசரேத்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சம சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சார்பாக மறுரூப ஆலயத்தில் மரக்கன்றுகன நடும் விழா, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் இயக்குநரும், திருமறையூர் சேகர தலைவருமான ஜாண் சாமுவேல் தலைமை தாங்கினார். சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன்துரை முன்னிலை வகித்தார்.

    விழாவில் திரு மண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவ தாஸ், சபை மூப்பர்கள் பாக்கியநாதன், ஜீவன், அகஸ்டின் செல்வராஜ், ஜாண்சேகர், ஜோயல் கோல்டுவின், பிரவின்குமார்,புஷ்பலதா சுவாமிதாஸ், ஆலய பாடகர் குழுவினர்கள், சபை மக்கள், தேவதாஸ் மறைக்குமார், நளினி ஜீவராஜ், பிரைட்டன் ஜோயல், முதியோர் இல்லம் மேலாளர் வனமோகன் ராஜன்,மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளி செயலர் எபனேசர், நாசரேத் முன்னாள்சேகர செயலர் மர்காஷியஸ் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து திருமறையூர் முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை சேகரத்தலைவர் ஜாண்சாமுவேல், சபை ஊழியர், ஸ்டான்லி ஜான்சன் துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் சபை மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள அகப்பைக்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செ ய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவி ரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில் கார் டிக்கியில் 110 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், காரின் உரிமை யாளரான அகப்பைகுளம் 1-வது தெருவை சேர்ந்த செல்வன் விக்டர் (வயது58) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது
    • முகாமில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட மொத்தம் 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவி தொகை, வேளாண் கருவிகள், இடுபொருட்கள் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 51 ஆயிரத்து 432- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    முகாமில் திருச்செந்தூர் வருவாய் ஆர்.டி.ஓ. புகாரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், வேளாண் இணை இயக்குநர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், சமூக நல அலுவலர் ரதிதேவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, தனி தாசில்தார் பேச்சிமுத்து, புறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வக்கு மார் மற்றும் பல்வேறுதுறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.
    • இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.சேகர குரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உபத்தலைவர் தமிழ் செல்வன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியிலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், சந்தி பஜார் வழியாக சென்று மர்காஷியஸ் கல்லூரி வந்து அடைந்தது.

    நிகழ்ச்சியை திருமண்டல தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். பேரணியில் தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனர் ஜாண் சாமு வேல், நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரி தாளா ளர் செல்வின், முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி மேலாளர் ஆனந்த ஜோதிபாலன், அருள்மணி, முன்னாள் நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ், உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் மற்றும் நாசரேத் பகுதி பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய யோ வான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் நிறைவு ஜெபம் செய்தார்.

    ஏற்பாடுகளை நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எபனேசர், செயலர் சாமு வேல்ராஜ், தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனரும்,தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிச னைத்துறை செயலருமான ஜாண்சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    ×