என் மலர்
நீங்கள் தேடியது "Nedungulam"
- அனைத்துத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர்.
- வேலன்புதுக்குளத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்கவும், விதவை உதவி தொகை பெறவும் மனுக்கள் பெறப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு அனைத்துறை அலுவலர் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் சகாயஎல்பின் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி வேளாண்மை அலுவலர் மாரிப்பாண்டி, உதவி தோட்டக்கலை அலுவலர் முகேஷ், கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கால்நடை உதவி மருத்துவர் சவுந்தர் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் கிழ் வளர்ச்சி திட்டங்களை விளக்கி பேசினர். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர். முகாமில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இதில் வேலன்புதுக்குளத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்கவும், ஆட்டுக் கொட்டை, மாட்டு கொட்டகை அமைக்கவும், விதவை உதவி தொகை பெறவும் மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜா, தேசிய ஊரகவேலை உறுதி திட்டஒருங்கிணைப்பாளர் ஜான்சிஅமலாராணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.