என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEDvBAN"

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • கொல்கத்தாவில் நெதர்லாந்து, வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய நெதர்லாந்து 229 ரன்களை எடுத்தது.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 68 ரன்களில் அவுட்டானார். வெஸ்லி பரேசி 41 ரன்னும், சைப்ரண்ட் 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    ×