என் மலர்
நீங்கள் தேடியது "NEDvPOL"
- ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
- 29 மற்றும் 83-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணி கோல் அடித்து வென்றது.
பெர்லின்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் போலந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் போலந்தின் ஆடம் புக்சா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நெதர்லாந்தின் காகி காக்போ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போட முயன்றனர். கடைசியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெகோர்ஸ்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இறுதியில், நெதர்லாந்து 2-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.