என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nellai District"
- ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
- உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை:
காலாண்டு வரி உயர்வுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேள னம் அறிவித்தது.
அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தை ஒட்டி நெல்லையில் வெளியூர்க ளில் இருந்து வந்த சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் தேவை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் டவுன், பாளை, வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள காலாண்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்று கூறி அவர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை அடை மிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் 6 பேர் சிக்கினர். இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் நேற்று ஆய்வு தொடங்கியது.
இந்த குவாரிகளை ஆய்வு செய்வதற்காக 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இன்று 2-வது நாளாக குவாரிகளில் ஆய்வு நடத்தினர்.
சப்-கலெக்டர் சந்திர சேகர் தலைமையிலான குழுவினரும், இதேபோல் கனிமவளத்துறை துணை இயக்குனர் சுமதி, உதவி இயக்குனர் பிரியா, புவியியலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலாக குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரில் செல்வக்குமார், ராஜேந்திரன் ஆகியோரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.
ஆயர்குளத்தை சேர்ந்த முருகன், இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று அவர்களது உடல்களை பெற்று செல்ல உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
முன்னதாக குவாரி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை முருகன், செல்வம் ஆகியோரது உறவினர்க–ளிடம் கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
அப்போது ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் ஆவுடையப்பன், பால சுப்பிரமணியன், துணை தாசில்தார் மாரிராஜா, ஆகியோர் உடனிருந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய துணை காவல் சரகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் சுமார் 35 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த போலீஸ் நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போலீசார் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
சில நேரங்களில் போலீசார் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுப்பது வழக்கத்தில் உண்டு.
அதன் அடிப்படையில் அவர்கள் கேட்கும் போலீஸ் நிலையங்களில் காலியிடம் இருந்தால் உயரதிகாரிகள் அந்த மனுவை பரிசீலனை செய்து பணியிட மாறுதல் வழங்குவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக போலீசாரின் இடமாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதனையொட்டி பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணியை முடித்தவர்கள் மற்றும் பணியிட மாறுதல் கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 490 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- உதவி வன பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு நெல்லையில் 2 தேர்வு மையங்களில் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது.
- மாவட்ட அளவில் கணினி வழித்தேர்வினை 1,246 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால், தமிழ்நாடு அரசு பணியில் தொகுதி1-ஏ.யில் அடங்கிய உதவி வன பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.என். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்களில் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் கணினி வழித்தேர்வினை 1,246 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். மேற்படி தேர்வு நாளன்று பஸ்களை தேர்வு மையத் திற்கு கூடுதலாக இயக்கு மாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு போலீ சார் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு நடை பெறும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி களுடன் தயார் நிலையில் வைத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாளன்று தடையில்லாத மின்சார வசதியினை செய்து கொ டுக்க மின்சாரத் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங் களை முன் கூட்டியே கண்ட றிந்து தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள். மேலும், தேர்வு அறையினுள் செல்போன் களை எடுத்து செல்ல அனுமதியில்லை. தேர்வு எழுதுபவர்கள் தவிர மற்ற வர்கள் தேர்வு மைய வளா கத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.
- நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.
நெல்லை:
தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னா பிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி நெல்லை யப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடை பெறும். இந்த நிகழ்ச்சிகளில் மாநகர பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.
பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, பேச்சி, பிரம்மசக்தி, முண்டசுவாமி, புதியவன் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுடன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நெல்லை:
தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்க–ளுடன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்ச–ருமான மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக கலந்துரை–யாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதி–களிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடு–களை அந்தந்த மாவட்ட செய–லாளர்கள் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இந்த கூட்டம் 5 இடங்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.–ஸ்டாலின் வாக்குச்சவாடி முகவர்களுடன் தொகுதி வாரியாக காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு பேட்டை வசந்தம் மகாலிலும், பாளை சட்டமன்ற தொகுதிக்கு வண்ணார்பேட்டை அப்னா பார்க் ஓட்டலிலும் நாளை மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் மாலை 4 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரும் வகையில் முன்னதாக தயாராக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அம்பை, நாங்கு–நேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரை–யாடல் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு 3 இடங்களில் நடைபெற உள்ளது.
அம்பை தொகுதிக்கு கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்திலும், நாங்குநேரி தொகுதிக்கு நாங்கு–நேரி சுப்புலெட்சுமி திருமண–மண்டபத்திலும், ராதாபுரம் தொகுதிக்கு வள்ளியூர் எம்.எஸ்.மகால் திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
எனவே அந்தந்த தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜமால், நிர்வாகிகள் உமர் பாரூக், நயினார், சுலைமான் மற்றும் பலர் வந்து அளித்த மனுவில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னரும் அதனை நடைமுறைக்கு கொண்டு வராமல் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.
அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கபடுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
மானூர் யூனியன் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி பிரேம்குமார் தலைமையில் ஊர்மக்கள் அளித்த மனுவில், தங்களது கிராமத்தில் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை.
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் என கூறியிருந்தனர்.
- தமிழகம் முழுவதும் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 61, 086 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 61, 086 பேர் விண்ணப்பத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் 191 இடங்களில் மொத்தம் 230 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக 63,388 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 மையங்களில் 59,700 பேருக்கு தேர்வெழுத அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 690 மையங்களில் நடந்த தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு மையத்தில் தேர்வர்களை கண்காணிப்பதற்கு முதன்மை கண்கா–ணிப்பாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், வீடியோ பதிவாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக தேர்வெண் மட்டுமே இருக்கைகளில் ஒட்டப்படும் நிலையில் தற்போது தேர்வர்களின் புகைப்படமும் ஒட்டப்பட்டு இருந்தது.
தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். மையங்களுக்குள் செல்போன்கள், மின்னணு சாதனங்கள், கை கடிகாரம், புத்தகங்கள், குறிப்புகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. காலை 8.30 மணி முதல் தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பாளையில் உள்ள ஒரு மையத்தில் நடந்த தேர்வினை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ஆகாஷ், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.
இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்கள் வழியாக வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சில பஸ்களும் இயக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 50,151 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10,935 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதனால் மொத்தத்தில் விண்ணப்பித்தவர்களில் 82 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர்.
- நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது.
- மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. நேற்று மாவட்டத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
அதேபோல் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளை, ராதாபுரம், வள்ளியூர் பகுதியிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 4 மண்டல பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மேலப்பாளையம் பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் இன்று கிருமிநாசினி தெளித்தனர்.
- பொதுமக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம்-2 என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- திசையன்விளை வட்டத்திற்கான முகாம், குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுனாமி பல்நோக்கு கட்டிடத்தில் நடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி–த்திட்டம்-2 என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் -2 முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
அதன்படி பாளையங்கோட்டை வட்டத்திற்கான முகாம் முன்னீர்பள்ளம் வாரச்சந்தை நடைபெறும் இடத்திலும், இட்டேரி நூலக கட்டிடத்திலும், மானூர் வட்டத்திகுட்பட்ட முகாம் குறிச்சிகுளம் சமுதாய நலக்கூடத்திலும், தாழையூத்து பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
சேரன்மகாதேவி வட்டத்திற்கான முகாம் பாப்பாக்குடி பஞ்சாயத்து அலுவலகத்திலும், வெங்கடரெங்கபுரம் சமுதாய நலக்கூடத்திலும், அம்பை வட்டத்திற்கான முகாம் சிவந்திபுரம் இந்துநாடார் வர்த்தக சங்கத்திலும், சாட்டுபத்து கிராம சேவை மைய கட்டிடத்திலும் நடைபெறுகிறது.
நாங்குநேரி வட்டத்திற்கான முகாம் செங்களாகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்திலும், இடையன்குளம் சமுதாய நலக்கூடத்திலும், ராதாபுரம் வட்டத்திற்கான முகாம் பரமேஸ்வரபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடக்கிறது.
திசையன்விளை வட்டத்திற்கான முகாம், குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுனாமி பல்நோக்கு கட்டிடத்தில் நடக்கிறது.
8-ந் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சாதிச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையான அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை சேவைகள் உள்ளிட்ட தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம். எனவே மேற்கண்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய்துறை மற்றும் பிறதுறைகளின் சேவைகளை பெற்று பயனடைய கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அந்த வகையில் இன்று மாவட்டத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாநகர பகுதியில் 14 பேரும், அம்பையில் 12 பேரும், சேரன்மகாதேவியில் 11 பேரும், களக்காடு, பாப்பாக்குடியில் தலா 7 பேரும், நாங்குநேரி. ராதாபுரத்தில் தலா 6 பேரும், மானூர், பாளையில் தலா 2 பேரும், வள்ளியூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.
- நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள்.
நெல்லை:
தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள். வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 800 பேர், அரசு பொறியியல் கல்லூரியில் 800 பேர், தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
வி.எம். சத்திரம் ரோஸ் மேரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 500 பேர், சங்கர்நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரி க்குலேசன் பள்ளியில் 929 பேர், பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1,000 பேர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 600 பேர், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள்.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமாள்புரம் சாராள் தக்கர் பள்ளியில் 1,000 ேபரும், பெருமாள்புரம் சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 789 பேர் என மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு மையத்துக்கு அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஊதா அல்லது கறுமை நிற பந்து முனைப்பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு அறைக்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்பான எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
தேர்வுக்கான ஏற்பாடு களை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்