search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiappar Kovil"

    • நெல்லையப்பர் கோவில் இந்தாண்டு பத்ர தீபம் விழா வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • விழாவில் 20- ந்தேதி ( வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சுவாமி கோவில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் இந்தாண்டு பத்ர தீபம் விழா வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    திருவிழா வில் 3 நாட்களிலும் சுவாமி வேணு வனநாதர் ( மேட்டு லிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும் திருமூல மகாலிங்கம் ஸ்ரீ காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளும் அம்மன் கோவில் ஊஞ்சல் மண்ட பத்தில் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

    விழாவில் 20- ந்தேதி ( வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சுவாமி கோவில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    21-ந் தேதி ( சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சுவாமி கோவிலில் உள் சன்னதி வெளிபிரகாரங்கள், ஸ்ரீ ஆறுமுக நயினார் கோவில் உள் சன்னதி வெளிபிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்திர தீபங்கள் ஏற்றப்படும். அதனை காண அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

    சுவாமி அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், ஸ்ரீ சண்முகர் தங்க சப்பரத்திலும் , சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் விஷேச அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரம் வளம் வருவார்கள். தொடர்ந்து இரவு 8 மணிக்கு நெல்லை ரதவீதிகளில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    ×