என் மலர்
நீங்கள் தேடியது "nelllai"
- பாளை மேல குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி தொழிலாளி.
- மோட்டார் சைக்கிள் மோமி மணி தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்தா அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளை மேல குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1-ந் தேதி குறிச்சி சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.
- விக்னேஷ் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது.
நெல்லை:
நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 19).இவர் நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் டவுனில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். சீதபற்ப நல்லூரை அடுத்த வெள்ளாளங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளியதும் உள்வீதி உலா நடைபெறுகிறது.
- இதில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வளையல் காணிக்கை வழங்கினர்.
நெல்லை:
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளியதும் உள்வீதி உலா நடைபெறுகிறது.
4-ம் திருவிழாவான இன்று நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.
இதில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வளையல் காணிக்கை வழங்கினர். தொடர்ந்து வளைகாப்பு வைபவ சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 7.30-க்குள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நடைபெறுகிறது.
இதில் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி நவதானியங்கள், பலகாரங்களை கொண்டு அம்பாள் மடி நிரப்புதலை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.