என் மலர்
நீங்கள் தேடியது "Netherland"
- செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தை வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
- வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
சென்னை, மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட் ரமணன். இவரது மனைவி கலா. இவர்களது மகள் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வெங்கட் ரமணனும், அவரது மனைவியும் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெதர்லாந்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர்.
இந்த வீட்டில் ஏற்கனவே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் மர்ம நபர்கள் வந்தால் செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தையும் வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெங்கட்ரமணனின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது செல்போன் மூலம் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.
இதுபற்றி அவர் உடனடியாக செல்போன் மூலம் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கட சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வெங்கட்ர மணனின் வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் பொருட்களுடன் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான அசோக் நகர் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகில் உள்ள பக்தவத்சலம் தெருவில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பல்லாவரம் பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பது தெரிந்தது.
இதில் பிடிபட்ட கொள்ளையன் கமலக்கண்ணன் மீது 70 வழக்குகளும் ஆரி பிலிப் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
நண்பர்களான இருவரும் கூட்டாக சேர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் ஆவர். போலீசார் விரட்டிசென்றபோது தப்பி ஓடமுயன்ற கொள்ளையன் ஆரி பிலிப் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கைதான 2 பேரிடம் இருந்து 6 பவுன் நகை, 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் மற்றும் கவரிங் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தின் பூட்டை உடைத்தும் புகுந்து உள்ளனர். அங்கு லேப்டாப் மட்டும் இருந்ததால் கொள்ளையடிக்காமல் திரும்பி வந்து இருக்கிறார்கள்.
அவர்கள் இதுபோல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.
நெதர்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் 3000 கார்களை ஏற்றி சென்ற ஒரு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்.
199 மீட்டர் நீளமுள்ள பனாமாவில் பதிவு செய்யப்பட்ட "ஃப்ரெமாண்டில் ஹைவே" எனும் கப்பல் ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அக்கப்பலில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:
இறந்த இந்திய மாலுமியின் குடும்பத்தோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்கிறோம். காயமடைந்த 20 பேருடனும் தொடர்பில் உள்ளோம். அந்த கப்பல் நிறுவனத்திடமிருந்தும், நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்தும் தேவைப்படும் தகவல்களை பெற்று வருகிறோம்.
இவ்வாறு தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
23 மாலுமிகளை மீட்க மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக டச்சு கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
தீ விபத்து குறித்து வெளியாகும் படங்களில் அக்கப்பலிலிருந்து புகை வருவது தெரிகிறது. கப்பலில் இருந்த 25 எலக்ட்ரிக் கார்களில் ஒன்றிலிருந்து இந்த தீ உருவாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ உருவாகி 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.
தீயை முழுவதும் அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தீயை அணைக்க நீரை கப்பலில் கொண்டு தேக்கி வைத்து பயன்படுத்தும் போது நீரின் பாரத்தினால் கப்பல் கவிழ்ந்து விடும் ஆபத்து இருப்பதால், தீயை அணைக்க சரியான வழிமுறையை திட்டமிட வேண்டும் எனவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாடன் கடலில் உள்ள அமலேண்ட் தீவின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அருகே இக்கப்பலிலிருந்து உதவி கோரும் அழைப்பு முதலில் வந்ததாக கடலோர காவற்படை தெரிவித்தது.
- கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
- தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை மட்டுமே வீழ்த்தி இருக்கும் நெதர்லாந்து அணி, தொடர் தோல்விகளுக்கு இன்றைய போட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
- தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது.
நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்யன் டட் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- யூரோ கோப்பை தொடரில் நேற்றிரவு 2 காலிறுதி போட்டிகள் நடைபெற்றன.
- ஜூலை 10 ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் துவங்குகின்றன.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 2024 யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்றிரவு நடைபெற்ற காலிறுதி போட்டிகளில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின.
முதலில் நடைபெற்ற இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான போட்டி பரபரப்பாக முடிந்தது. போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு அடித்திருந்ததால் பெனால்டி கிக் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இங்கிலாந்து 5-3 என்ற முறையில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து வருகிற 10 ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளும், வருகிற 11 ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.


14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது சுற்றில் அந்த அணி கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்குள் கால் பதித்தது. தற்போதைய உலக தரவரிசையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அணியை (5-வது இடம்) விட நெதர்லாந்து அணி (4-வது இடம்) ஒரு இடம் தான் முன்னணியில் உள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 105 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 48 முறையும், இந்திய அணி 33 தடவையும் வென்று இருக்கின்றன. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் எங்களுக்கு எதிராக நெதர்லாந்து அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் சமீப காலங்களில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தோம். இந்திய ஹாக்கி அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும்.’ என்றார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘130 கோடி இந்திய மக்களின் விருப்பம் என்னவோ? அது தான் எங்களுடைய விருப்பமாகும். இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கிறார்கள். நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து அணியின் கேப்டன் பில்லி பாக்கெர் கூறுகையில், ‘ஆட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் எப்பொழுதும் நாங்கள் எங்களுக்குரிய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. எங்களை விட இந்திய அணிக்கு அதிக நெருக்கடி இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.
முன்னதாக மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018
14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தைப்பிடிக்கும் அணிகள் ‘கிராஸ் ஓவர்’ என அழைக்கப்படும் 2-வது சுற்றுக்கு நுழையும். கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.
9-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிந்தது. அதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, ஆகிய 4 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.
கிராஸ் ஓவர் ஆட்டம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடந்தது. இதன் முடிவில் நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், கனடா, சீனா, நியூசிலாந்து அணிகள் வெறியேற்றப்பட்டன.
கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் மோது கின்றன.
இந்திய அணி கால் இறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை (13-ந்தேதி) எதிர்கொள்கிறது.
1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், 5-1 என்ற கணக்கில் கனடாவையும் வீழ்த்தியது. 2-2 என்ற கணக்கில் பெல்ஜியத்துடன் ‘டிரா’ செய்தது.
3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தது. 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும், 7-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது. கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும். #HockeyWorldCup2018
