என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "new member"
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
- 44-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1,050 உறுப்பினர்களை அபிராமிநாதன் சேர்த்துள்ளார்.
தூத்துக்குடி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். அதில் மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அக்கட்சியினருக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து தூத்துக்குடி 35, 36, மற்றும் 44 ஆகிய வார்டுகளுக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 44-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1,050 உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அதற்கான உறுப்பினர் படிவத்தை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், வட்ட செயலாளர் சுப்பையா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அவலூர்பேட்டை ஊராட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை ஊராட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நடராஜன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரோஜா அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கைளை ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து நீர், மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
- கூடுதலாக 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.
மதுரை
அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்களில் நடந்தது.
வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் நீர்மோர் பந்தலை திறந்து, புதிய உறுப்பினர் படிவங்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்ஆர். பி.உதயகுமார் வழங்கி பேசியதாவது:-
மக்கள் சேவையில் முத்திரை பதிக்கும் வகையில் ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் தங்கள் பணியை
அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆளுங் கட்சியாக வந்தபோதும் கூட மக்கள் பணி செய்யாமல் தூங்குகிறது.
மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயமாக, 3-வது தலைமுறையாக எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு கிடைத்து ள்ளார். அம்மாவின் மறைவிற்கு பின்பு சுனாமி பேரலையாக அ.தி.மு.க. தத்தளித்த பொழுது, கலங்கரை விளக்கமாக இந்த இயக்கத்திற்கு கிடைத்தார், எடப்பாடியார்.
கடன் பெறமாட்டோம் என்று கூறி இரண்டே ஆண்டில் ரூ.1½ லட்சம் கடனை தமிழகத்திற்கு பெற்றுவிட்டார்கள். இந்த தி.மு.க. ஆட்சியின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தீவிர உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனை அம்மா 1½ லட்சம் தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். தற்போது எடப்பாடியார் 2 கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கி புதிய சாதனை படைப்பார்.
அதற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார்
- கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது
கடலூர்:
:கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான அருட் செல்வம், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் படிவங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடலூர் மாநகராட்சி தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா கூறுகையில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க . பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சாதனைகளை குறித்தும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் கடலூரில் நடைபெற்று வரும் ஏராளமான வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்று வருவதை மக்களிடம் எடுத்துக் கூறி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கடலூர் மாநகரத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் புதிய உறுப்பினர்கள்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்