search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் மாநகர தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரம்
    X

    கடலூரில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமையில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அருட்செல்வம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்கள்

    கடலூரில் மாநகர தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரம்

    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார்
    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

    கடலூர்:

    :கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான அருட் செல்வம், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் படிவங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடலூர் மாநகராட்சி தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா கூறுகையில்,

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க . பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சாதனைகளை குறித்தும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் கடலூரில் நடைபெற்று வரும் ஏராளமான வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்று வருவதை மக்களிடம் எடுத்துக் கூறி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கடலூர் மாநகரத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் புதிய உறுப்பினர்கள்

    Next Story
    ×