search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New trains"

    • புதிய ரெயில்களை இயக்க தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    விருதுநகர்

    2018 முதல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மதுரை-நெல்லை இரட்டை ரெயில் பாதைப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் ரெயில் நிலையங்களில் முன் கூட்டி வந்த ரெயில்கள் எதிரே வரும் ரெயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூடுதலான ரெயில்களை இந்த வழித் தடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக வடமாநி லங்களில் இருந்து மதுரை வரை வரும் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்கவும், வடமாநி லங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மதுரை சந்திப்பு ரெயில் நிலையம் வரை நீட்டிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரெயில்களை இயக்க வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரெயில்களாக இயங்கும் ரெயில்களை நிரந்தரமாக இயக்கவும், தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கி ன்றனர்.

    சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம்

    (அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும் மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். கொல்லம்-விருதுநகர்-மானாமதுரை-ராமேசுவரம் இடையே புதிய ரெயில்களை இயக்க வேண்டும்.

    புதிய வந்தே பாரத் ரெயில்கள்

    சென்னை-கன்னியாகுமரி வரையும், நெல்லையில் இருந்து -பெங்களூரு வரையும் செல்லும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் ரெயில்வே அமைச்ச கத்திற்கும் ரெயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை நெல்லை வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானிர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரையும், மதுரை-சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லையில் இருந்து புறப்படும் வகையிலும் நீட்டிக்க வேண்டும்.

    விழுப்புரம்-மதுரை பயணிகள் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை இயங்கும் பயணிகள் ரெயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். போடி-மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

    கோவை-மதுரை வரை இயங்கும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

    மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரெயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். விருதுநகர் -மானாமதுரை வழியாக காரைக்குடி, திருச்சி வரை செல்லும் டெமு ரெயிலை பயணிகள் ரெயிலாக மாற்றி செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

    செங்கோட்டை-மதுரைக்கு அதிகாலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு புதிய இணைப்பு ரெயில் விட வேண்டும். கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வரை இயங்கும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

    குருவாயூர்-புனலூர் வரை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரெயிலை உடனே இயக்க வேண்டும்.

    2018-ல் அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயிலையும் காலதாமதமின்றி இயக்க வேண்டும். தாம்பரம்-திருவாரூர்-காரைக்குடி வழியாக நெல்லை சந்திப்பு வரை அறிவிக்கப்பட்ட விரைவு ரெயிலை காலதாமதமின்றி இயக்க வேண்டும்.

    நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு செல்லும் விரைவு ரெயிலை மதுரையில் இருந்து புறப்பட செய்ய வேண்டும். நெல்லையில் இருந்து பிளாஸ்பூர் வரை செல்லும் விரைவு ரெயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்க வேண்டும்.

    அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரையில் இருந்து இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×