என் மலர்
நீங்கள் தேடியது "newzealand"
- நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பியது, தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சொந்த மண்ணிலேயே 0-3 என தோற்றதை ஏற்றுக் கொள்வது சற்று கடினம்தான். ஆனால் தோல்விக்கு காரணம் என்ன என சுயபரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். போதிய பயிற்சி இல்லையா? அல்லது நன்றாக விளையாடவில்லையா? என தெரிந்துகொள்ள வேண்டும்.
முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் நன்றாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடினார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகியவை உள்ளன.
- நியூசிலாந்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது.
துபாய்:
ஐசிசி நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.
இதற்கிடையே, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
துபாய்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 6-ம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லிங்டன்:
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சீயர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.
சென்னை:
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.



இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.
4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.
இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமதுஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.
நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.
2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia

