என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nicholas Pooran"

    • நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
    • கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்களை குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 114 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரன் 128 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.

    கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
    • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.

    டிரினிடாட்:

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஸ்டப்ஸ் 76 ரன்கள் எடுத்தார்.

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.

    ஷாய் ஹோப் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும், அலிக் அத்தானஸ் 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இந்நிலையில், நிக்கோலஸ் பூரன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவை முந்தி 3-வது இடம்பிடித்தார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மாவும், 173 சிக்சர்களுடன் மார்ட்டின் கப்தில் 2வது இடத்திலும் உள்ளனர். நிக்கோலஸ் பூரன் 139 சிக்சருடன் 3வது இடம் பிடித்துள்ளார்.

    137 சிக்சருடன் ஜோஸ் பட்லர் 4வது இடமும், 136 சிக்சருடன் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்திலும் உள்ளனர்.

    • 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.
    • 2024 ஆம் ஆண்டில் இதுவரை நிக்கோலஸ் பூரன் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.

    2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் பூரன் 139 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலின் 9 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

    ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் கிறிஸ் கெயில் மட்டுமே 6 இடங்களை பிடித்துள்ளார்.

    வீரர் 

    சிக்ஸர்கள் 

    ஆண்டு

    நிக்கோலஸ் பூரன்

    139* 

    2024

    கிறிஸ் கெயில்

    135 

    2015

    கிறிஸ் கெயில்

    121 

    2012

    கிறிஸ் கெயில்

    116 

    2011

    கிறிஸ் கெயில்

    112 

    2016

    கிறிஸ் கெயில்

    101 

    2017

    ஆண்ட்ரே ரஸ்ஸல்

    101 

    2019

    கிறிஸ் கெயில்

    100 

    2013

    க்ளென் பிலிப்ஸ்

    97 

    2021

    கீரன் பொல்லார்ட்

    96 

    2019

    • முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டிரின்பாகோ அணி 197 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீசில் தற்போது கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது. கேப்டன் பிளட்சர் 93 ரன்னும், கைல் மேயர்ஸ் 60 ரன்னும் எடுத்தனர்.

    டிரின்பாகோ அணியின் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட் எடுத்தார்.

    195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டிரின்பாகோ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஜேசன் ராய், நிகோலஸ் பூரன் அதிரடி காட்டினர்.

    நிகோலஸ் பூரன் 43 பந்தில் 94 ரன்னும், ஜேசன் ராய் 34 பந்தில் 64 ரன்னும் எடுத்தனர். இறுதியில், டிரின்பாகோ அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 7 சிக்சர் அடித்தார். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் 63 இன்னிங்சில் 151 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டில் 36 இன்னிங்சில் 135 சிக்சர் அடித்து இருந்தார்.

    இதேபோல், டி20 அரங்கில் ஒரு ஆண்டில் 2,000 ரன் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகோலஸ் பூரன் படைத்துள்ளார்.

    இவர் 63 இன்னிங்சில் 2,022 ரன் எடுத்துள்ளார்.

    பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021ல் 48 இன்னிங்சில் 2,036 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை
    • சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் பூரன்.

    டி20 உலகக் கோப்பை முதல் சுற்று லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கேப்டன் நிகோலஸ் பூரன் பேசும்போது, தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

    'நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றிவிட்டோம். இந்த தோல்வி வேதனை அளிக்கிறது. நான் எனது மோசமான ஆட்டத்தால் சக வீரர்களையும் ஏமாற்றிவிட்டேன். இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 145 ரன்கள் எடுத்தால், அடுத்து அந்த ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். அது ஒரு சவாலாகவும் இருக்கும்' என்றார் பூரன்.

    மேலும், சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்த பூரன், அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். அயர்லாந்திடம் அடைந்த தோல்வி தங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • இது போல தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    • இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சிம்ரன் ஹெட்மயர் மற்றும் ஹோல்டர் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் வித்தியாசமான அணியாக இருக்கும். இந்த தொடரில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும். இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை வென்று பதிலடி கொடுப்போம். சிம்ரன் ஹெட்மயர் மீண்டும் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போல தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடரின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • வங்காளதேசத்துக்கு எதிராக டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என கைப்பற்றியது.
    • நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    கயானா:

    வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 என கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அபிப் ஹுசைன் அரை சதமடித்தார். லிட்டன் தாஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் 39 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டி 20 தொடரைக் கைப்பற்றியது. நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    ×