என் மலர்
நீங்கள் தேடியது "Nilgiirs"
- கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் நடமாடுவதாகக் கூறப்படுகிறது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறும் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவி வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் நேரத்தில் இரண்டு குட்டிகளுடன் கரடி உலவி வந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்தனா். சிலா் கைப்பேசியில் அதை படம் எடுத்தனா்.
இந்தக் கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் அப்பகுதியில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கரடிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் குட்டிகளுடன் திரியும் கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- பல கட்டமாக முயற்சி செய்து மாலை 3.45 மணிக்கு எந்திரம் சீரமைக்கப்பட்டது.
- மாலை 4.30 மணிக்கு மின்வினியோகம் சீராக வழங்கப்பட்டது.
நீலகிரி
கூடலூர் கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் மின்சார வினியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இதை சரி செய்யும் பணியில் மின்வாரிய துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக ஓவேலி பகுதியில் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்வாரிய துறையினர் பழுதை சரி செய்யும் பணியில் நேற்று காலை 10 மணிக்கு ஈடுபட்டனர். இந்த சமயத்தில் கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் உடனடியாக சீரமைக்க முடியவில்லை. இதனால் பல கட்டமாக முயற்சி செய்து மாலை 3.45 மணிக்கு எந்திரம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மின்வினியோகமும் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஓட்டல்களில் உணவுகள் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர் நடவடிக்கைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு மின்வினியோகம் சீராக வழங்கப்பட்டது. அதன் பின்னரே பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினர் நிம்மதி அடைந்தனர்.
- மருத்துவ முகாமை சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- முகாமில் ரத்த அழுத்தம், கல்லீரல், கணையம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி,
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, குன்னூர் நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இலவச இருதயம் , கல்லீரல் , கணையம் மற்றும் பொதுமருத்துவ முகாம் சி.எஸ்.ஐ வெஸ்லி சர்ச் மண்டபத்தில் நடந்தது.
நீலகிரி தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் வரவேற்றார். மருத்துவ முகாமை சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ்குமார், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலாகேத்ரின், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதகத்துல்லா, செல்வம், உதயத்தேவன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ரத்த அழுத்தம், கல்லீரல், கணையம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.நிகழ்ச்சியில், தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன், நகர அவைத்தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் முருகேசன், வினோத் மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சார்லி மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் விஜயராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர் சாதிக் பாட்சா, செல்லின், பிரவீன், மாணவரணி துணை அமைப்பாளர் ஹரி, கார்த்திக், தினேஷ், விவேக், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி கிளை செயலாளர்கள் நந்தகுமார், சந்திப் குமார், சண்முகம், ஆறுமுகம், ஜாகீர் ரகீம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இப்பயிற்சி வகுப்பில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கலந்துக்கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ்-கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய மின் மற்றும் மின்னணுவியல் நிறுவனமானது 20 பேர் கொண்ட குழுவின் மூலம் 2 நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
இப்பயிற்சி வகுப்பில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குநர் சிவக்குமார் , கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.
கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து் கொண்டனர். கண்ணன், சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கீழ்கோத்தகிரி விவேக், முருகன் ,பாபு தினேஷ் உள்ளிட்டோர் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு குறித்து மாணவர்களிடம் உரையாடினர். கலந்துக்கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கணினி ஆசிரியர் கோபிநாத் நன்றி தெரிவித்தார் .
- இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாமுக்கு வந்தவர்களுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து-மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதுதவிர பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை நடத்தப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதுதவிர சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கோத்தகிரி சிறப்பு மருத்துவ முகாமில் வட்டார பொது சுகாதார மருத்துவர் ராஜேஷ், மாவட்ட துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் குமாரசுவாமி, பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி, சிவா, குமார், பிரசாத் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோத்தகிரி சிறப்பு முகாமை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத் போஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குன்னூரில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- மேலும் வனத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குன்னூர்,
நீலகிரி, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழக தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இவை தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
குன்னூரில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. டேன் டீ தேயிலை தலைமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர்மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் டேன் டீ தேயிலை பற்றியும் தேயிலை சந்தையில் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்று விரிவாக கேட்டறிந்தார்.
மேலும் வனத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டேன் டீ பொதுமேலாளர் அசோக் குமார். டேன் டீ தலைமை அதிகாரி சூப்பிரிட் முகமத். நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி கவுதம். கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
- போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பெரிய தொழிற்சாலைகளுக்கான ராட்சத எந்திரங்கள் சரக்கு லாரிகள் மூலம் எடுத்து வரப்படுகின்றன.
அந்த வாகனங்களின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். அவை சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
எனவே அந்த நேரத்தில் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பணியாட்கள் ஈடுபடுவது உண்டு. ஆனால் வனப்பகுதிகளில் சரக்கு லாரி வரும்போது வழியில் உள்ள மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை சேதப்படுத்துகிறது. அவற்றை லாரி டிரைவர்கள் சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் ராட்சத எந்திரங்களுடன் சரக்கு லாரிகள் பெரும்பாலும் மாலைநேரத்தில் வந்து செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி யாக தலையிட்டு இதற்கு நிரந்தரதீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர்.
- 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர்.
அரவேணு,
சி.ஐ.எஸ்சி. மண்டல அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பிருந்தாவன் பள்ளி அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி கிடைத்து உள்ளது.
மேலும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிருந்தாவன் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி ஊட்டி அறிவாலய வளாகத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாநில விளையாட்டு மே்ம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர அவை தலைவர் ஜெய கோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், வெங்கடேஷ், ராமசந்திரன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி பிளோரீனா, வனிதா, பிரியா வினோதினி, பிளோ ரீனா, மாவட்ட அணி சா ர்பில் மேத்யூஸ், செல்வராஜ், மூர்த்தி, ஜெயராமன், தருமன், மார்கெட் ரவி, அமலநாதன், மத்தீன், ஆட்டோ ராஜன், தியாகு, பௌ்ளன், ஜோகி, சிவகுமார், வெங்கடேஷ், பாபு, அபு, ரகமத்துல்லா, மஞ்சுகுமார், கிட்டான், விஜயகுமார், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், ராஜூ, காளி, மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வனத்துறை, மின்சாரதுறை போன்ற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்டதற்கு இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது. ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- போலீஸ் டி.எஸ்.பி யசோதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- ஊட்டி அரசு கல்லூரியில் இருந்து 200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி ஊட்டி ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதி வரை சென்றது. ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முன்னதாக சாலை பாதுகாப்வை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மசீலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
- தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் வழங்கியதாக பேட்டி
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம், இளித்தொரை கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவா் டில்லா், பவா் வீடா்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.
மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) கீா்த்தி பிரியதா்சினி முன்னிலை வகித்தாா். குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக விவசாயத் துறைக்காக தனி பட்ஜெட் அறிவித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்வதால் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
விவசாயத்தை பெருக்க வேண்டும் என்றால் எந்திரங்கள் பயன்பாடு அவசியம். எனவே தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் ஆகியவை ரூ.41.23 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு, விசை களையெடுப்பான் கருவிகள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகின்றன. குன்னூா் வட்டத்தில், 8 விவசாயிகளுக்கு பவா் டில்லா்கள், 3 பேருக்கு பவா் வீடா்கள் என மொத்தம் ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.