என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nithya Menen"

    • தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
    • அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாதலால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாகவும். அதனை 45 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்கி பகவானின் ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம்.
    • கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்ற நித்யா மேனன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.

    திருப்பதி:

    தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது.

    இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் வந்தார்.

    அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின்னர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.

    அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • நடிகை நித்யா மேனன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருடன் நடித்த தமிழ் பட நடிகர்களை பட்டியலிட தொடங்கினர்.


    நித்யா மேனன் பதிவு

    இந்நிலையில், இந்த செய்தியை நித்யா மேனன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " இது முற்றிலும் தவறான வதந்தி. இது மாதிரியான ஒரு நேர்காணலை நான் கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது.

    தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் வினய் ராய், நவ்தீப், பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • மகாராஜா வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளதால் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.

    இந்நிலையில், தற்போது இயக்குனர் பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

    முன்னதாக, மகாராஜா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நித்திலன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்க இருப்பதாகவும் அப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.
    • சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு.

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.

     

    திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
    • திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ளது.

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.

    சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதை வென்றனர்.

    திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து அப்படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையான தெரியும் நடிப்பிதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துக்கொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி.

    சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையான உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.

    இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.
    • படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

    சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

    கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

    இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".
    • கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

    ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    கடந்த மாதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறி படக்குழு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது.
    • சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.

    70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாழில் கலந்துக் கொண்டனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர்.

    சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது.
    • சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் வென்றார்.

    70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாழில் கலந்துக் கொண்டனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர்.

    சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.

    விருது வாங்கிய மகிழ்ச்சியை அவரது பெற்றோருடன் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது நித்யா மேனன் தன் பெற்றொருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன்.
    • நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன்.

    தமிழில் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யாமேனன் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில், "நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன்.

     

    நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன். அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்காமல் நிராகரித்து விடுவேன். அதுமாதிரி படங்களில் நடிக்க பிடிக்காது.

    நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன். அந்த படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமோ என்றும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பேன். எல்லோரும் கடைபிடிக்கும் வழியிலேயே நானும் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×