search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitya Kalyani Amman"

    • விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது.
    • நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை இலத்துார் சாலையில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்தரி திருவிழா கொண்டா டப்பட்டு வருகிறது.இந்தாண்டு நவராத்தரி விழா கடந்த திங்கட்கி ழமை தொடங்கி யது.

    விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது. அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அம்மன் நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவாசக கமிட்டித்தலைவா் தங்கையா தலைமை தாங்கினார்.

    துணைச்செயலாளா் முன்னாள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், கமிட்டி உறுப்பினா் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயலாளா் ராம்நாத் வரவேற்று பேசினார். திருவாசகி பிரேமா குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. முன்னதாக நித்யாகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கமிட்டி உறுப்பினா்கள் செண்பகம், வீரபுத்திரன், நெடுஞ்செழியன், குருசாமி, கல்யாணி, இசக்கி, முத்துசிவா இந்திரா, முத்துலெட்சுமி, சுபா, செல்வி, பேச்சியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×