என் மலர்
நீங்கள் தேடியது "No Ball"
- ஒரே ஆட்டத்தில் அதிக நோ பால் வீசிய அணியாக இருந்த அயர்லாந்தை பின்னுக்கு தள்ளியது இந்திய அணி.
- நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.
பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 நோ பால்களை வீசி அதிக நோ பால் வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது.
ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
- ஷான் மசூத் நோ பாலில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டார்.
- ஆனாலும் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்க்ஷைர் - லாங்க்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யார்க்ஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஷான் மசூத் 61 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியின் 15-வது ஓவரை ஜாக் பிளேதர்விக் வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ஷான் மசூதின் கால்கள் ஸ்டம்பில் பட பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் என நினைத்த அவர் கிரீசை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ பால் என்றார். இதையறியாத ஷான் மசூத், த்ரோ எறிவதை கண்டு வேகமாக ஓடியும் கிரீசை எட்ட முடியாததால் ரன் அவுட் ஆனார்.
ஒரே பந்தில் ஷான் மசூத் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் நடுவர் ஷான் மசூதை மீண்டும் விளையாடும்படி கூறியது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
நோ பால் சிக்னலை கவனிக்கவில்லை என்பதால் ஹிட் விக்கெட் என நினைத்து வெளியேற முயற்சித்தேன் என எதிரணி கேப்டன் மற்றும் அம்பயர்களிடம் ஷான் மசூத் கூறினார். இதனால் அம்பயர் ரன் அவுட்டை சரிபார்த்தார்.
எம்.சி.சி. விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக கிரீசில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். இதனாலேயே ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shan Masood steps on his stumps off a no ball, Lancashire take the bails off at the other end - but Masood remained not out under law 31.7 pic.twitter.com/yQG6gP6Rac
— Vitality Blast (@VitalityBlast) June 20, 2024