என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "No child"
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கில் தொங்கினர்.
- தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஐராவதநல்லூர் யாதவர் தெருவை சேர்ந்த வர் அருண்குமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 26). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழுந்தை இல்லை. குழந்தை பேருக் காக பல மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்த னர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் வாழ்யிக் கைல் விரத்தியடைந்த இரு வரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலை யில் இருந்த இருவரையும் மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கான கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த சம்ப வம் குறித்து ஜெயலட்சுமியின் தாயார் கன்னிசெல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி இருவரும் தற் கொலை முயற்சி செய்தது அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திண்டிவனம் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
- வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் அவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லை.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே உள்ள வெள்ளி மேடுப்பேட்டை அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக். அவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லை.
கடந்த மாதம் 3 தினங்க ளாக பெரமண்டூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் ஷர்மிளா இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி அசோக், தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருவருக்கும், சண்டை ஏற்பட்டுள்ளது. பின், அசோக் வெளியில் சென்றபோது, ஷர்மிளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, வெள்ளி மேடுப்பேட்டை போலீசார், கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதா கவும், வரதட்சனை கொடுமையால், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது தந்தை சுப்பன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெள்ளி மேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஷர்மிளா விடம், வரதட்சனை கேட்டு அசோக், அவரது தந்தை மதுரை, சித்தி பார்வதி, 17 வயதுடைய தங்கை ஆகியோர் கொடுமைப்படு–த்தியதும், சம்பவத்தன்று, ஷர்மிளாவை அசோக் அடித்து துன்புறுத்தி அழைத்து வந்ததும், அதன் காரணமாக அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார், தற்கொலை தூண்டுதல், வரதட்சனை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ், அசோக்கை கைது செய்த னர். தலைமறைவாக உள்ள மதுரை, பார்வதி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்