search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "No parking"

    • அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
    • விதிமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    சென்னையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு தனிநபரோ, குடியிருப்பு சங்கமோ (அ) வணிக நிறுவனமோ, 'NO PARKNG' என்ற பலகைகள் அல்லது தடுப்புகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், "சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் "நோ பார்க்கிங்" சைன்போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது மற்றும் முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள் இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது.

    சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி. "நோ பார்க்கிக் பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

    மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:-

    * அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். விதிமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    * அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    * பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    * வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும். இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது.
    • கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு.
    • ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இது தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், ஒருகட்டத்தில் விரக்தியாகி தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.

    ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே சமயம், தன்னை பழிவாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • புதுவையின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.
    • இதனை தடுக்க வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த வழி இல்லாமல், வணிக நிறுவன ஊழியர்களின் வாகனங்களின் பின்னால் 2-ம் வரிசையில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகனங்கள் நிறுத்த தடை இதனை தடுக்க வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள கடை ஊழியர்கள் தங்களது வாகனங்களை கடைகளின் முன் விடாமல், பழைய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் ஏரியாவில் விட வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆயினும் இதுவரை அந்த உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை.

    இதனையடுத்து நேரு வீதி வணிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பழைய சிறைச்சாலையில் விடுவதற்கு பார்க்கிங் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ.100 வசூலிக்கப்படும். ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது வாகனங்களை நிறுத்தி, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.

    அதன்படி, முதல் வணிக நிறுவனஊழியர்கள் வாகனங்களை கடை முன்பு நிறுத்த கூடாது. பொதுமக்கள் மட்டும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், துணை உதவி ஆய்வாளர் வேணுகோபால் ஆகியோர் இன்று ஒவ்வொரு கடையாக சென்று ஊழியர்களிடம் எடுத்துரைத்தனர்.

    மேலும் அவர்கள், வாகனங்களில் செல்லும்போது தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஊட்டி மார்க்கெட் வளாகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என்று நகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
    ஊட்டி:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டி மார்க்கெட் தொடங்கப்பட்டது. இந்த மார்க்கெட்டில் ஆங்கிலேயர் அதிகமாக பயன்படுத்தும் சூப்புக்கான பாலக், கிளைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள், கோழி, ஆடு, அணை மீன்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முக்கிய மார்க்கெட்டாக விளங்கியது.

    மலை மாவட்டமான நீலகிரியில் விளையும் மங்குஸ்தான், ரம்பூட்டான், பிளம்ஸ், பேரிக்காய் போன்றவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது அந்த மார்க்கெட் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமானது ஆகும். மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள், துணிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க நகராட்சி வாகனம் உள்ளே சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்துக்குள் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் குறுகிய பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சிலர் வேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மார்க்கெட்டில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்பவர்கள், தங்களது கடைக்கு முன்பாக பொருட்களை வைப்பதாலும், வாகனங்களை முன்னால் நிறுத்துவதாலும் மக்கள் எளிதில் நடந்து செல்ல முடிவது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டின் நுழைவுவாயில் பகுதிகளில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர். அதில் இங்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இருப்பினும் மார்க்கெட் வளாகத்துக்குள் சிலர் மாற்று வழியாக வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வாகனங்களில் வந்து செல்வது வழக்கம் தான். ஆனால் சிலர் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டு குறுகிய பாதையில் செல்வதால், பொதுமக்கள் ஒதுங்க கூட இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். எனவே அனுமதியின்றி மார்க்கெட் வளாகத்துக்குள் வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    ×