என் மலர்
நீங்கள் தேடியது "Nochikulam"
- நொச்சிக்குளம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- மாவட்ட கவுன்சிலர் கனிமொழி சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசுகளை வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஒன்றியம், நொச்சிக்குளம் ஊராட்சியில் நெல்லை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல் மற்றும் நெல்லை கோட்ட உதவி இயக்குநர் கலையரசி ஆகியோர் அறிவுரைப்படி நொச்சிக்குளம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்தாய் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கவுன்சிலர் கனிமொழி சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசுகளை வழங்கினார். முகாமில் பசுக்களுக்கு தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. முகாமில் குடற்புழுநீக்கம், சினை பார்த்தல், செயற்கை முறை கருவூட்டல், சினையுறா மாடுகளுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. முகாமில் 250 பசுக்கள், 172 வெள்ளாடுகள், 805 செம்மறியாடுகள், 225கோழிகள், 45வெண்பன்றிகள் பயன்பெற்றது. சங்கரன்கோவில் கால்நடை உதவி இயக்குனர் ரஹ்மத்துல்லா தொழில்நுட்ப உரையாற்றினார்.வடக்குப்புதூர் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் வசந்தா, பெரும்பத்தூர் உதவி மருத்துவர் மகிழன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முத்துமாரியப்பன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு, முகாம் ஏற்பாடுகளை செய்து கால்நடை களுக்கு சிகிச்சை அளித்தனர்.