என் மலர்
நீங்கள் தேடியது "northeastern states"
- இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
- இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.
வங்கதேசத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார். சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ் இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.
இந்நிலையில் நேற்று சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).
இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

சீனாவில் முகமது யூனுஸ் இந்தியாவை பற்றி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. வடகிழக்கு மாநில தலைவர்கள் மற்றும் அமைப்புகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரும் பொருளாதார நிபுணரான சஞ்சீவ் சன்யால் இதுபற்றி பேசும்போது, வங்கதேசத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும்போது, 7 இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பு பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
- பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வெப்ப அலை பாதிப்பு தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது, நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து, அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும், ரீமால் புயல் பாதிப்பு குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.