search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "not be disconnected"

    • ஈரோட்டில் சில விசைத்தறி உரிமையா ளர்கள் தவிர பலரும் 4 மாதமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
    • மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் இந்திராணியை தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்து மனு வழங்கினர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:

    தமிழக அரசு விசைத்த றிக்கான மின் கட்டணத்தை கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தியது. உயர்த்திய கட்டணத்தை குறைக்க ஒழுங்கு முறை ஆணையம் மின் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

    விசைத்தறிக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 1.40 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்து அதையே செயல்படுத்தினர். பல முறை மின் துறை அமைச்சரை சந்தித்தபோது,

    'மின் கட்டண உயர்வை ரத்து செய்ய முடியாது. முடிந்தால் குறைக்கிறோம்' என வாய்மொழி உத்தர வாதம் கொடுத்தார். ஆனாலும் குறைக்கப்பட வில்லை.

    இதனால் அன்று முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என அறிவித்தோம். எப்போது மின் கட்டணம் குறைகிறதோ அன்று கட்டணத்தை செலுத்துவோம் என்றோம்.

    மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி பல்லடம், சோமனூர், திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறியா ளர்கள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். அங்கு மின் துறை சார்பில் நடவடிக்கை இல்லை.

    ஆனால் ஈரோட்டில் சில விசைத்தறி உரிமையா ளர்கள் தவிர பலரும் 4 மாதமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் மின் கட்டண த்தை யாரும் செலுத்த வேண்டாம் என கூட்ட மைப்பு சார்பில் முடிவு செய்துள்ளோம்.

    எனவே மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி உரிமையாளர்கள் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. இது தொடர்பாக மின் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    ×