என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Notes"
- பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை :
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ-மாணவிகள் கையில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இருக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ஏற்கனவே வந்தன.
அவை அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுகள் புதுக்கோட்டை வரப்பெற்றன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 57 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து விலையில்லா புத்தக பை, விலையில்லா யூனிபார்ம், ஜாமின்ட்ரி பாக்ஸ், அட்லஸ் ஆகியவை வர உள்ளது. இவை வந்த பின் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகிக்கப்படும். இதேபோல 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா காலணிகள் வந்தன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
- சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய ஜே.இ.இ. தேர்வுக்கான பி.இ., பி.டெக் தாள்-1 விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.
- இந்த நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.
சேலம்:
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு (முதன்மை)-2022 அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் காகாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் எழுதினர். தாள் -1 தேர்வு காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக நடைபெற்றது.
தாள்- 1 விடைகள் வெளியீடு
இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை முதற்கட்ட ேஜ.இ.இ. முதன்ைம நுழைவு தேர்வுக்கான பி.இ., பி.டெக் பாடப்பிரிவு தாள்-1 க்கான இறுதி விடை குறிப்புகள் வெளியிட்டுள்ளது.
அதில், ஷிப்ட் -1, ஷிப்ட்-2 கேள்வித்தாளுக்கான விடைகள் கேள்வி ஐ.டி. மற்றும் சரியான தேர்வு ஐ.டி. யுடன் வழங்கி உள்ளது.
பி.இ., பி.டெக் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் இறுதி விடைக்குறிப்புகளை பார்த்து மதிப்பெண்கள் ஒப்பீடு செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் பி.ஆர்க். பி.பிளானிங் தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் தேர்வு
இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.
மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்