என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NSS Special camp"

    • விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் பாபநாசத்தில் 7 நாட்கள் நடைபெற்றது.
    • முகாமில், பேரிடர் மேலாண்மை, மூலிகை மருத்துவம், முழு சுகாதாரம் பேணுதல், நுகர்வோர் பாதுகாப்பு, இளைஞர் நலன் பாதுகாப்பு போன்ற கருத்தரங்குகள் நடைபெற்றன.

    அம்பை:

    விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் பாபநாசத்தில் 7 நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் தலைமை தாங்கி மாணவர்கள் ஆளுமை பண்பை வளர்த்து கொள்வது குறித்து எடுத்துரைத்தார். ஆசிரியை ஆனந்தி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுரேஷ்பாபு வரவேற்று திட்ட அறிக்கை அளித்தார்.

    முகாமில், பேரிடர் மேலாண்மை, மூலிகை மருத்துவம், முழு சுகாதாரம் பேணுதல், நுகர்வோர் பாதுகாப்பு, இளைஞர் நலன் பாதுகாப்பு போன்ற கருத்தரங்குகள் நடைபெற்றன. மேலும் பாபநாசம் சாரண, சாரணிய பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடுதல், எயிட்ஸ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, பாபநாசம் கோவில் வெளி வளாகம் சுத்தம் செய்தல், தெப்பக்குளக்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றது. சிறப்பு முகாமில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாட்டு நலப்பணி மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி முகாமை பார்வையிட்டு என்.எஸ்.எஸ்.மாணவர்களை பாராட்டினார். முடிவில் தேசிய பசுமைப் பொறுப்பாளர் பார்த்தசாரதி செல்வகணேசன் நன்றி கூறினார். விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நுண் உயிர் உரக்குடில், கழிவு நீர் மேலாண்மை நிலையம் போன்றவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், நகராட்சி ஆய்வாளர் கண்மணி, எஸ்.பி.எம். மேற்பார்வையாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×