என் மலர்
நீங்கள் தேடியது "nuclear reactors"
- இந்தியா-அமெரிக்கா இடையே 2007 இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.
- 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் இணைந்து இந்த ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பின்பு நடைமுறைக்குவரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமேரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் அணு உலைகள் அமைக்க ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது என்று அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளது.
- துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.
- மூன்று கட்டங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து 8இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.

இதற்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது புலனாகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் சிரியா, ஈராக் என மற்ற நாடுகள் உள்ளதால் மிகவும் தொலைவில் இருக்கும் ஈரானை ஏவுகணை மூலம் தாக்கினால் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் விழலாம். அது சர்வதேச சிக்கலில் முடியும். எனவே பைட்டர் பிளேன்களை 2000 கிலோமீட்டர் அனுப்பி மட்டுமே இந்த தாக்குதலை செயல்படுத்த முடியும் என்று இஸ்ரேல் யோசித்து இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கிறது.
கடந்த 25 நாட்களாக வானிலை மோசமாக இருந்ததால் பைட்டர் பிளேன்கள் குறிவைப்பதில் சிரமம் இருந்ததால் தற்போது இத்தனை நாட்கள் தள்ளி இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தாக்குதலை ஈரான் திறம்பட சமாளித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 2 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல்களால் தங்களுக்கு அதிக பாதிப்பு இல்லை எனவும் இஸ்ரேலுக்கு தங்களின் எதிர் தாக்குதலால் பாதிப்பு எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஈரான் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தினால் ஈரான் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் உடனே தாக்குதல் நடத்தப் பார்க்காது என்றே ஈரான் அதிகார வட்டாரங்களில் இருந்து செய்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. ஆனாலும் மத்திய கிழக்கில் போர் உருவாகும் பதற்றம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவை, ஏன் உலகத்தையே அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம், அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்? என்கிற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முக்கியமாக பூவுலக நண்பர்கள் கொடுத்த வழக்கில் வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போவதாக தெரிவித்தது. தமிழகத்தில் எந்த எந்த கட்சிகள் எல்லாம் அன்றைக்குக் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றிணைந்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகாவின் எந்த பகுதியிலும் வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தின. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்புகளை 5 வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது என்றும், பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதற்கு உரிய தொழில்நுட்பத்தை முடிவு செய்து கட்டமைக்கும் வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Vaiko #NuclearWaste