என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nurseries"
- நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.
- நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளில் வாங்கி பயனடையலாம்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983, பிரிவு 3-ன் படி காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யும் நாற்றங்கால்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.
தென்காசி மாவட்டத்தில் நாற்று பண்ணைகளில் காய்கறி செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உரிமம் பெறாமல் நாற்று பண்ணை அமைத்துள்ள வர்கள் மற்றும் அமைக்க இருப்பவர்கள் விற்பனை உரிமம் பெற விண்ணப்ப படிவம் 'அ'வில் இரு நகல் களில் பூர்த்தி செய்து ரூ. 1000-க்கு உரிய கணக்கில் இணையதளம் மூலம் செலுத்தி தேவையான ஆவணங்களுடன் நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு நாற்றுப் பண்ணை அமைந்துள்ள பகுதி கட்டிட வரைபடம், சொந்த இடமாக இருந்தால் சொத்து வரிரசீது நகல், வாடகை இடமாக இருந்தால் ஒப்பந்தபத்திரம், அதன் நிலவரி ரசீது, ஆதார் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் புகைப் படம் ஆகியவற்றுடன் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காய்கறி நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரி க்கப்பட்ட நாற்று பண்ணைகளில் மட்டும் வாங்கி பயனடையலாம். உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நாற்றுக்களை வாங்கி ஏமாற வேண்டாம்.
உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தொழில் நுட்ப வளர்ச்சியால், வீரிய ஒட்டு ரகம், அதிக மகசூல் தரும் ரகங்கள் என விதைகள் வந்துள்ளன.
- தக்காளி நாற்று 50 பைசாவுக்கும், மிளகாய், கத்தரி, காலிப்ளவர் 90 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை:
வீரிய ஒட்டு ரக விதைகள் வருகைக்கு முன்பு, விவசாயிகளே வயல்களில் நாற்றுக்களை தயாரித்து நடவு செய்து சாகுபடி செய்து வந்தனர். தொழில் நுட்ப வளர்ச்சியால், வீரிய ஒட்டு ரகம், அதிக மகசூல் தரும் ரகங்கள் என விதைகள் வந்துள்ளன.
இந்த விதைகளில் நடவு, வளர்ப்பு உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. இதற்கு தீர்வாக விவசாயிகளுக்கு உதவும் வகையில், நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி மற்றும் அருகாமையிலுள்ள மற்ற பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் அமைந்துள்ளன.
ஒவ்வொன்றும் தலா 3 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். இப்பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.இப்பண்ணைகளிலிருந்து தக்காளி நாற்று 22 நாட்களிலும், மற்ற காய்கறி நாற்றுக்கள் 30 நாட்களிலும் விவசாயிகள் வாங்கி நடவு செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகரித்தாலும் சாகுபடி காலம் குறைகிறது. குறைந்த நாட்களில் மகசூல் எடுக்க முடிகிறது.இதனால் உடுமலை சுற்றுப்பகுதிகளில் காய்கறி சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
ஒரு ஏக்கருக்கு தக்காளி நாற்றுக்கள் 10 ஆயிரம் தேவைப்படுகிறது. அதே போல் மிளகாய் நாற்றுக்கள், 7 ஆயிரம், கத்தரி 5 ஆயிரம், காலிப்ளவர் 10 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது.தக்காளி நாற்று 50 பைசாவுக்கும், மிளகாய், கத்தரி, காலிப்ளவர் 90 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், வேளாண் சாகுபடி பணிகள் பாதித்துள்ளது. அதிலும், தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடி முடங்கியுள்ளது.இதனால் ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும், அவற்றின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப தலா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை நாற்றுக்கள் தேக்கமடைந்துள்ளன.
இங்கு உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் 25 முதல் 30 நாட்களில் வயல்களில் நடவு செய்யாவிட்டால், முழுமையாக வீணாகும் நிலையும், பல லட்சம் ரூபாய் நிதி இழப்பும் ஏற்படும் சூழல் உள்ளது.
அதே போல் தக்காளி நடவு செய்தால் 60 நாட்களில் அறுவடை என ஜனவரி மாதம் தக்காளி வரத்து துவங்கும். நேரடியாக நிலத்தில் நடவு செய்யும் தக்காளி, 40 நாட்கள் வரையும், கொடி முறையில் நடவு செய்யும் தக்காளி 70 முதல் 90 நாட்கள் வரையும் மகசூல் கொடுத்து வரும்.மிளகாய், கத்தரி உள்ளிட்ட பயிர்கள் 75 முதல் 80 நாட்கள் அறுவடைக்கு தயாராகி 6 மாதம் வரை மகசூல் தரும். சாகுபடி பணி தாமதமானதால் அடுத்து வரும் நாட்களில் உற்பத்தி குறைந்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இது குறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:-
பருவத்திற்கு தேவையான, நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பருவ மழை தாமதமாக துவங்கிய நிலையில், தொடர்ந்து பெய்து வருவதால் விவசாய பணிகள் பாதித்துள்ளன.அதே போல், தக்காளி விலை தற்போது கடும் சரிவை சந்தித்து 14 கிலோ பெட்டி, ரூ.100க்கும் குறைவாக விற்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.தொடர் மழை மற்றும் அடுத்தடுத்து புயல், கன மழை என வானிலை மையம் அறிவித்துள்ளதால் வானிலை நிலவரம், பருவ மழைக்கு பின் நடவு செய்யலாம், என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தற்போது, நடவு செய்த தக்காளி நாற்றுக்களும் பாதித்துள்ளன. இதனால் நாற்றுப்பண்ணைகளில், உற்பத்தி செய்த நாற்றுக்கள் அதிகளவு தேக்கமடைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பண்ணைகளிலுள்ள நாற்றுக்கள் வீணாகி விடும்.அடுத்த சுற்று நாற்று உற்பத்திக்கும், ஒரு மாதம் வரை தாமதமாகும். மழை குறைந்து விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகும் போது, நாற்றுக்கள் பற்றாக்குறை ஏற்படும்.
மழையில் நாற்றுக்கள் நடவு செய்தாலும், அழுகல், வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். நடப்பு சீசனில் தக்காளி நடவு பெருமளவு குறைந்துள்ளதால், ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் வரத்தும் குறையும்.மற்ற காய்கறிகளுக்கும் இதே சூழல் உள்ளதால், விலையும் உயரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்