என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NZvIND"
- வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர்.
- வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.
இந்தியா- நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. ஆடம் மில்னே, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
220 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து டிவோன் கான்வே 38 (51), கேன் வில்லியம்சன் 0 (3) இருவரும் விளையாடி வரும் நிலையில், மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இப்போட்டி முடிந்தப் பிறகு இந்திய அணிக் கேப்டன் ஷிகர் தவன் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர். அத்தொடரில் சிறப்பாக செயல்படுவது மிக முக்கியம்.
இந்திய காலநிலைதான் அங்கும் இருக்கும். இதனால், அங்கு சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் அவுட் ஆனார்.
- தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.
கிறிஸ்ட்சர்ச்:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.
இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடியது.
பின் ஆலன்-கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தீபக் சாஹர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் கான்வே 4 பவுண்டரி அடித்தார். 17-வது ஓவரில் தான் தொடக்க ஜோடி பிரிந்தது. ஆலன் 54 பந்தில் 57 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து உம்ரான் மாலிக் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அப்போது ஸ்கோர் 97 ஆக இருந்தது. அடுத்து வில்லியம்சன் களம் வந்தார். 18 ஓவர் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 104 ரன்கள் இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.
- இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
- வாஷிங்டன் சுந்தர் 64 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கிறிஸ்ட்சர்ச்:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'டாஸ்' வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.
தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான தவான் 28 ரன்னிலும், ரிஷப்பண்ட் 10 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும், தீபக் ஹூடா 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.
இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.
- முதல் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து முன்னிலை.
- இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹேமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது இதனிடையே, கிறிஸ்ட்சர்ச் பகுதியில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- இந்திய அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
கிறிஸ்ட்சர்ச்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹேமில்டனில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (புதன் கிழமை) நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது. மழையால் ரத்தானாலோ அல்லது தோற்றாலோ இந்தியா ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.
சூர்யகுமார் யாதவ், சுப் மன்கில், கேப்டன் தவான் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம்லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், கான்வே சவுத்தி, ஹென்றி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது.
- கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஹாமில்டன்:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர்தவான், சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்ட்டது.
இந்த நிலையில் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், இந்த போட்டி 29 ஓவர்கள் (ஒரு அணிக்கு) கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே உணவு இடைவேளை அளிக்கப்படும். குடிநீர் இடைவேளை ஏதும் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆட்டம் தொடர்ந்த பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 30-ந் தேதி நடைபெறும்.
- 4.5 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- தவான் 2 ரன்னிலும் சுப்மன் கில் 19 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இன்றைய போட்டியின் ஆடும் லெவனில் இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாமில்டன்,
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. முன்னதாக ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் -சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 4.5 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தவான் 2 ரன்னிலும் சுப்மன் கில் 19 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
- நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
ஹேமில்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்று வருகின்றன.
ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணிக்கு உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றுள்ளன.
- முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே.
- 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே.
ஹேமில்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் நாளை (27-ந்தேதி) நடக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. அந்த அளவுக்கு பந்து வீச்சில் பலவீனத்தை காண முடிந்தது. 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே.
இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், யசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை வாரி கொடுத்து இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒருவர் மட்டுமே ரன்களை அதிகம் கொடுக்காமல் நேர்த்தியாக பந்து வீசினார்.
தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்த வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றே தெரிகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், பிலிப்ஸ், கான்வே, சவுத்தி, பெர்குசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி 'டை' ஆனது. 5 ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- 40-வது ஓவரில் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் சாய ஆரம்பித்தது.
- திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று, 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்கள் பின் ஆலன் 22 (25), டிவோன் கான்வே 24 (42) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து டேரில் மிட்செலும் 11 (16) சொதப்பினார்.
இறுதியில் கேன் வில்லியம்சன், டாம் லதாம் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இதனால், நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் முடிவில் முடிவில் 309/3 ரன்களை சேர்த்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. டாம் லதாம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 94 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தார்கள்.
இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ஷிகர் தவன் பேட்டிகொடுத்தார். அதில், ''பேட்டிங்கில் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். பந்துவீச்சிலும் முதல் 10-15 ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு நெருக்கடியை ஏற்படுத்தினோம். ஆனால், அடுத்து சரியாக செயல்படவில்லை. ஷார்ட் பால்களை தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தோம். லதாம் அதனை சிறப்பாக அட்டாக் செய்தார். குறிப்பாக (ஷர்தூல் தாகூர் வீசிய) 40ஆவது ஓவரில் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் சாய ஆரம்பித்தது.
40ஆவது ஓவரில் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசியதால், டாம் லதாம் அதனை சிறப்பாக எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால், அந்த ஓவரில் 25 ரன்கள் கசிந்தது.
அணியில் இருக்கும் அனைவரும் இளம் வீரர்கள். பந்துவீச்சு, பீல்டிங் இரண்டையும் மேம்படுத்தியே ஆக வேண்டும். திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம். அடுத்த போட்டிகளில் இந்த குறைகளை சரிசெய்து, பலமிக்க அணியாக களமிறங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு தவான் கூறினார்.
- வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 306 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆக்லாந்து:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளும் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி இன்று நடந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்கள்.
டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 24-வது ஓவரில் இந்தியாவின் முதல் விக்கெட் விழுந்தது. சுப்மன் கில் 50 ரன்னில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஷிகர் தவானும் ஆவுட் ஆனார். டிம் சவுதி பந்தில் கேட்ச் ஆனார். ஷிகர் தவான் 77 பந்தில் 72 ரன் எடுத்தார்.
அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட் 15 ரன்னில் (23 பந்து) பெர்குசன் பந்தில் போல்டு ஆனார். அடுத்து களம் வந்த சூர்யகுமார் யாதவ் (4 ரன்) அதே ஓவரில் அவுட் ஆனார்.
அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 160 ரன்னாக (32.5 ஓவர்) இருந்தது. அடுத்து ஸ்ரேயாஸ் அய்யருடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா 39.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் 56 பந்தில் அரை சதம் அடித்தார். சஞ்சு சாம்சன் 38 பந்தில் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் வந்தார். அவர் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆனார். அவர் 76 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், டிம் சவுதி தலா 3 விக்கெட்டும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடியது. ஃபின் ஆலன் - கான்வே தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆலன் 22 ரன்னிலும் கான்வே 24 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் 11 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து கேப்டன் வில்லியம்சன் - டாம் லாதம் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதலில் நிதானமாக விளையாடிய லாதம் அதன்பின்னர் அதிரடியாக விளையாடினார். 76 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 306 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 104 பந்தில் 145 ரன்களுடனும் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 27-ந் தேதி நடக்கிறது.
- தவான் - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.
- ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சன் 36 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - சுப்மன்கில் களமிறங்கினார்.
இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. 50 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் அவுட் ஆனார். அவர் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே தவான் ஆட்டமிழந்தார். அவர் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னிலும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் - சாம்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சன் 36 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் கடைசி நான்கு போட்டியில் ஒரு சதம் உள்பட மூன்று அரை சதம் அடித்துள்ளார்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்