என் மலர்
நீங்கள் தேடியது "NZvSL"
- இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இலங்கை 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹாமில்டன்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 30.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் நியூசிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக காமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 3 விக்கெட், ஜேக்கப் டப்பி 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11-ம் தேதி நடக்கிறது.
- முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 290 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆகினர்.
இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணி இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பதும் நிசாங்கா - அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர். இதில் அவிஷ்கா பெர்னாண்டோ 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிசங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
குசல் மெண்டீஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் அசலங்கா 0, நிசங்கா 66 ரன்னிலும் ஆடட்மிழந்தனர். ஜனித் லியனகே அரைசதம் (53) விளாசி அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மார்க் சாப்மேன் மட்டுமே 81 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 29.4 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் நான்கு பேட்ஸ்மேன்களான மார்ட்டின் கப்தில் (1), கொலின் முன்றோ (16), டிம் செய்பெர்ட் (2), ஹென்ரி நிக்கோல்ஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 27 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

அதன்பின் வந்த ராஸ் டெய்லர் (33), மிட்செல் சான்ட்னெர் (13), டக் பிரேஸ்வெல் (44) ரன்களும், ஸ்காட் குகெலெஜின் ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 35 ரன்களும், டிம் சவுத்தி 8 பந்தில் 13 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சமரவிக்ரமாக (0), டிக்வெல்லா (18) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த குசால் பெரேரா 23 ரன்களும், குசால் மெண்டிஸ் 17 ரன்களும், திசாரா பெரேரா 43 ரன்களும் சேர்த்தனர். திசாரா பேரேரா ஆட்டமிழக்கும்போது இலங்கை 12.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்திருந்தது. 45 பந்தில் 52 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 16.5 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் நியூசிலாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பெர்குசன், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்த தோல்வியின் மூலம் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் இலங்கை வெறுங்கையோடு திரும்பியது.

ராஸ் டெய்லர்
பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா (46), தனஞ்ஜயா டி சில்வா 36 ரன்களும், குசால் பேரேரா 43 ரன்களும் சேர்த்தனர். இதனால் இலங்கை அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது.

சதம் அடித்த நிக்கோல்ஸ்
ஆனால் குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், தசுன் ஷனகா 2 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை தடுமாற ஆரம்பித்தது. திசாரா பேரேரா 63 பந்தில் 80 ரன்களும், தனுஷ்கா குணதிலகா 31 ரன்களும் எடுக்க இலங்கை 41.4 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

திசாரா பெரேரா
இதனால் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டிம் சவுத்தி (துணைக்கேப்டன்), 2. பெர்குசன், 3. மார்ட்டின் கப்தில், 4. ஸ்காட் குகேலெஜின், 5. கொலின் முன்றோ, 6. ஜிம்மி நீசம், 7. ஹென்ரி நிக்கோல்ஸ், 8. கிளென் பிலிப்ஸ், 9. சேத் ரேன்ஸ், 10. மிட்செல் சான்ட்னெர், 11. டிம் செய்பெர்ட், 12. இஷ் சோதி, 13. ராஸ் டெய்லர்.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. குசால் பெரேரா (102), டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் இலங்கை 326 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் மலிங்காவிற்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது ஐசிசி.
49-வது ஓவரை திசாரா பேரேரா வீசினார். இந்த ஓவரில் நீசம் முதல் நான்கு பந்துகளையும் இமாலய சிக்சருக்கு தூக்கினார். ஐந்தாவது பந்து நோ-பால். இதில் இரண்டு ரன்கள் அடித்தார். நோ-பால் என்பதால் அதற்குப் பதிலாக வீசிய பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஐந்து பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசிய நீசம் கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கி சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். இந்த ஓவரில் திசாரா பெரேரா 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் திசாரா பெரேரா. இதற்கு முன் கடந்த 2013-ல் தென்ஆப்பிரிக்கா வீரர் ராபின் பீட்டர்சன் திசாரா பெரேரா ஓவரில் 35 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி நீசம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பின் இன்றுதான் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். 13 பந்தில் 6 சிக்சருடன் 47 ரன்கள் குவித்த நீசம், அதிவேக அரைசதம் என்ற சாதனையை தவறவிட்டார்.
நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கொலின் முன்றோ 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து கப்தில் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 139 பந்தில் 138 ரன்கள் விளாசி வெளியேறினார்.

நீசம்
அதன்பின் வந்த ராஸ் டெய்டர் 54 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் அடிக்க நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் குசால் பெரேரா அற்புதமாக விளையாடினார்.

குணதிலகா
ஆனால் குசால் மெண்டிஸ் (18), சண்டிமல் (10), குணரத்னே (11), திசாரா பேரேரா (4) சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. குசால் பெரேரா 86 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை 49 ஓவரில் 326 சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டம் நாளை மவுண்ட் மவுங்கானுயில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி போராடும். டெஸ்ட் தொடரை போல் ஒரு நாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் நியூசிலாந்து உள்ளது.
74 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது. நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம், நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

தொடக்க வீரரான லாதம் 370 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 176 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 5-வது வீரராக களம் இறங்கிய நிக்கோல்ஸ் 225 பந்துகளில் 162 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.
நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

660 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு 636 ரன்கள் தேவை. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்களில் 636 ரன்கள் என்பது எளிதான காரியம் அல்ல. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து திணறியது. 64 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்தில் 68 ரன் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.
இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியும் திணறியது. பேட்டிங்கில் ஜொலித்த டிம் சவுத்தி பந்து வீச்சிலும் அசத்தினார். குணதிலகா (8), கருணாரத்னே (7), சண்டிமல் (6) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது இலங்கை.

மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 27 ரன்னுடனும், சில்வா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது.
இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் குவித்தார்.
296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னும், மேத்யூஸ் 117 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.
இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் 141 ரன்னும், மேத்யூஸ் 120 ரன்னும் எடுத்தனர். #NZvSL