search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3-வது ஒருநாள் போட்டி: 150 ரன்னில் நியூசிலாந்து ஆல் அவுட்- 140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி
    X

    3-வது ஒருநாள் போட்டி: 150 ரன்னில் நியூசிலாந்து ஆல் அவுட்- 140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி

    • முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 290 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆகினர்.

    இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணி இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பதும் நிசாங்கா - அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர். இதில் அவிஷ்கா பெர்னாண்டோ 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிசங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.

    குசல் மெண்டீஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் அசலங்கா 0, நிசங்கா 66 ரன்னிலும் ஆடட்மிழந்தனர். ஜனித் லியனகே அரைசதம் (53) விளாசி அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மார்க் சாப்மேன் மட்டுமே 81 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 29.4 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

    Next Story
    ×