search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "o panner selvam"

    • அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
    • அடுத்தடுத்து இப்படி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான உத்தரவு பிறப்பித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான விசாரணையின் போது 11-ந்தேதி நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    மேலும் அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. அடுத்தடுத்து இப்படி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான உத்தரவு பிறப்பித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அதே சமயம் இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவாக கருதப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று தேர்தல் பொறுப்பாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணம் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன.

    இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

    அதன்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியும் காலியாகி இருப்பதால் அவற்றையும் சேர்த்து நடத்திவிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதம் நடத்த இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 தொகுதி இடைத்தேர்தல் ‘‘மினி பொது தேர்தல்’’ ஆக கருதப்படுகிறது. இந்த 20 தொகுதி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    ஆளும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது அந்த கட்சிக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளது. 20 தொகுதிகளில் 8 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அ.தி.மு.க. சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும்.

    இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. இந்த 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய இலக்குடன் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தனர்.

    20 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் என 120 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்குறி நீடிக்கும் நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களின் பணியை முடுக்கி விடுவதற்காக ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 120 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதலில் ஆய்வு செய்யப்பட்டது. பிறகு பிரசார திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவது பற்றியும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசினார்கள்.



    20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொகுதி பொறுப்பாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டு அறிந்தனர். பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பேச்சாளர்களை களம் இறக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    20 தொகுதி தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எதிர்கொள்வது பற்றியும், அவர்களது பிரசாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரன் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சனையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது.

    ஆலோசனைக்கு பிறகு பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது “20 தொகுதிகளிலும் அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்” என்று அவர் கூறினார்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். கட்சி நமது பக்கம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவும் ஆட்சியை 5 ஆண்டுக்கு கொண்டு செல்லவும் இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் ஜெயித்தே ஆக வேண்டும்.

    அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், துரைக்கண்ணு மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஜே.சி.டி.பிரபாகர், விஜிலா சத்தியானந்த் எம்.பி., ஆதிராஜாராம், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், தளவாய்சுந்தரம், செம்மலை, ராஜன் செல்லப்பா, மாதவரம் மூர்த்தி, சிறுணியம் பலராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிந்து கொள்ள மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, ராஜேஷ், தி.நகர் சத்யா, விஜயகுமார் எம்.பி., இ.சி.சேகர், மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் திரண்டிருந்தனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam #TTVDhinakaran
    எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு கேட்டார் என டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். #OPS #EPS #TTVDhinakaran
    மதுரை:

    டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறினார். 

    ஒரு வாரத்திற்கு முன்பு, டிடிவி தினகரனின் நண்பரிடம் பன்னீர் செல்வம் நேரம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக, பேச வேண்டும் என நேரம் கேட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    மேலும், கடந்த ஆண்டும் தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு நடைபெற்ற இடத்தில், சிசிடிவி கேமராக்கள் இருந்திருக்கும் என்றும், உரிய நேரத்தில் ஆதாரத்தை கொடுப்போம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டது.

    தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 70 எம்.எல்.ஏ.க்கள், 10 அமைச்சர்கள் உள்ளனர்.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் அடுத்த முதல்-அமைச்சர் டி.டி.வி. தினகரன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி முறையாக நடைபெறாதது தான்.

    தூர்வாரும் பணிக்கான பொறுப்பை எடுத்து கொண்டு அதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் பாதித்து தண்ணீர் கடலில் கலந்தது குறித்து கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கட்சி தலைவர்களும் பேசிக்கொள்கிறார்கள்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வாழ்நாளை சிறையில் கழித்த பேரளறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, தமிழக கவர்னர் காலம் தாழ்த்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
    அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் தொடங்கியது. #AIADMK
    சென்னை:

    அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மற்றும் கேரள மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டி தீர்மானம், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்ககோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

    அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகிய இருவரும், ‘கருணாநிதிக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. அதனால், ஓய்வெடுக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறினர்.
    திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Karunanidhi #OPS #DMK #ADMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    மருத்துவக்குழுவினர் வீட்டிலேயே இருந்து அவர்களை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.

    அங்கு ஸ்டாலின் உடன் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

    கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு அவர்கள் 15 நிமிடத்தில் புறப்பட்டனர். சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியை சந்தித்து பேசினோம். விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தார்.

    ஓ.பன்னீர் செல்வமும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் வழக்கை விரைந்து முடிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கோரியுள்ளது. #OPS
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் தற்போது நடந்து வருகிறது.

    இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை  விரைந்து முடிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து, வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 7 அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு செல்லாத நிலையில், இரு அணிகளுக்கு இடையே மீண்டும் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ADMK #EPS #OPS
    பெரியகுளம்:

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் துணை முதல்வராக தற்போது இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தார்.

    கடந்த சில நாட்களாக அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் விடுக்கப்பட வில்லை என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கொடைக்கானல் மலர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் என்று புறக்கணித்தார்.

    கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்று விடுவார். ஆனால் இந்த ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கொடைக்கானல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இன்று காலைதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அப்போது எடப்பாடி அணியினர் வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோட்டில் அவரை வழியனுப்பி வைக்க திரண்டு இருந்தனர். ஆனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை.

    இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில் இதுவரை 7 அரசு விழாக்கள் நடந்து முடிந்துள்ளது. ஆனால், துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அந்த விழாக்களுக்கு அவரும் செல்லவில்லை என்றனர்.
    ×