என் மலர்
நீங்கள் தேடியது "O Raja"
- தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
- குழுவின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு வரை உள்ள நிலையில் குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இதில் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தேனி ஆவினுக்கு 2019ம் ஆண்டு புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டார்.
இவர்கள் பதவிக்காலத்தில் தேனி ஆவினில் துணை மேலாளர், டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 38 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனத்தில் கூட்டுறவு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிதாக பணியில் சேர்ந்த 38 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டது. தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த குழுவின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு வரை உள்ள நிலையில் குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். இதனையடுத்து 17 இயக்குனர்கள் மற்றும் 420 பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆவின் செயல்ஆட்சியராக தேனி கலெக்டர் ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.
கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமின் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு ஆஜராகினர்.
அப்போது ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (13-ந்தேதி) வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். எனவே நாளை குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தற்போது மதுரை மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். இவர் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாகவும், அதற்கு ஓ.ராஜா தான் காரணம் என அறிந்துகொண்டு அதை தட்டிக்கேட்ட துரையிடம் போனில் பேசும் ஓ.ராஜா, “ஏன்டா ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறாய்?” என கேட்கிறார். “நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என்கிறார் துரை.
“நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் ஆகும். அதற்கு நீயா செலவு செய்வாய்? பணம் சேர்க்காமலும் பதவி இல்லாமலும் காரில் போக முடியுமா? ஓட்டுக்கு ரூ.500 வரை பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். அது போன்ற எங்களுக்கு யார் என்ன செய்கிறார்கள்? என்று தெரியாதா? தேவையில்லாமல் ரேசன் கடைகளில் பிரச்சனை செய்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. #ADMK #ORaja
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டிப்பட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் போல் நடத்தப்பட்டது. கூட்டத்தை காட்டுவதற்காக ஊரக வேலை திட்ட பணியாளர்களை வேலை அட்டையை புதுப்பித்து தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர்.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை நம்பி சென்றவர்கள் யாரும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என்றார். டி.டி.வி.தினகரன் இல்லாவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்-அமைச்சராக வந்திருக்க முடியாது.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நான் இப்போது சவால் விடுகிறேன். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா பணம் கொடுத்து தோற்கடித்து விட்டார். இதுதொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தனர். ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் விலகி விடுவோம் என கூறியதால், வேறுவழியின்றி ஓ.ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் என்ன பேரம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. அவரை மீண்டும் கட்சியில் இணைத்து விட்டனர். இது ஏமாற்று வேலை. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #AMMK #ThangaTamilSelvan


கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக்கேட்டுகொள்கிறோம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #ORaja #EPS #OPS