என் மலர்
நீங்கள் தேடியது "obscenity dance"
- கோவில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.
- தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஆபாசமாக ஆடினார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு கோவில்களில் வைகாசி திருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழா வில் கரகாட்டம், ஆடலும்-பாடலும், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தொப்பம்பட்டி பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பெண் கலைஞர்கள் ஆடி க்கொண்டு இருந்த போது தொப்பம்பட்டி தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி அவர்களுடன் சேர்ந்து ஆபாசமாக ஆடினார்.
இதனை அங்கிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தி.மு.க. கவுன்சிலர் கரகாட்ட பெண் கலைஞருடன் உற்சாக மிகுதியில் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வேகமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.