என் மலர்
நீங்கள் தேடியது "Ochathevar"
- வருகிற 15-ந் தேதி மூவேந்தர் முன்னேற்ற கழக இணைத்தலைவர் டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவி சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர் வழங்குகிறார்.
மதுரை
மூவேந்தர் முன்னேற்ற கழக இணைத்தலைவர் டி. ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு 15-ந் தேதி திருமங்கலத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுதிறாளிகளுக்கு வெண்கோல், உணவுப்பொருட்கள், வேட்டி-சேலை உள்ளிட்டவைகளை சுந்தர செல்வி ஒச்சாத்தேவர் வழங்குகிறார். அன்று மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார் மற்றும் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.