என் மலர்
நீங்கள் தேடியது "Odisha govt"
- உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
- நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.
புவனேஷ்வர்:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:
உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.
நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.
புவனேஸ்வர்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழ்கிறது.
- தங்களது ஸ்பான்சர்ஷிப்பை ஒடிசா மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்தது.
புவனேஸ்வர்:
இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இதற்கிடையே, ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டித்தது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்-பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
- ஏற்கனவே கேரளா மற்றும் பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது என கூறினார்.
அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது.
புவனேஸ்வர்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் என மொத்தம் 55 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியால் அரசுக்கு 2 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
- ஒடிசாவில் 22 மாதங்களில் தினமும் 777 பேரை நாய்கள் தாக்கியுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஒடிசாவில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், அம்மாநில அரசு வழங்கிய தரவுகளின்படி, ஒடிசாவில் ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5.20 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, தவறான கோரைகள் அல்லது வளர்ப்பு நாய்கள் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 777 நபர்களைக் குறிவைத்துள்ளன.
காங்கிரஸின் ராயகடா எம்எல்ஏ கத்ரகா அப்பலா சுவாமியின் கேள்விக்கு, மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோகுலானந்த மல்லிக் பதில் அளித்தார். அப்போது அவர்," 22 மாதங்களில் ஒடிசாவில் மொத்தம் 5,20,237 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்றார்.
அதன்படி, 2023ல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2024 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 33,547, 32,561 மற்றும் 29,801 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2019ம் ஆண்டில் கால்நடை கணக்கெடுப்பின்படி, ஒடிசாவில் 17.34 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவந்துள்ளது.
மேலும், சட்டமடையில் "விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதி, 2023-ஐ பின்பற்றி, நகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் திட்ட அங்கீகாரச் சான்றிதழைப் பெற்ற நிறுவனங்கள் மூலம் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக" அமைச்சர் கூறினார்.
2022-23 நிதியாண்டில் ஒடிசாவின் எட்டு நகர்ப்புறங்களில் 4,605 தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டதாகவும் மல்லிக் சபையில் தெரிவித்தார்.