என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Officer surprise inspection"
- ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது
- விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு புதியதாக ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர்.செந்தில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி, டாக்டர்கள். செந்தில், பார்த்திபன், தன்வீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
- மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். இந்த வாகன சோதனையில் தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 கனரக வாகனங்கள், ஒரு டிராக்டர், சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக இயக்கிய ஒரு ஆம்னி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரி வசூலிக்கவும், ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கும் பொருட்டு தணிக்கை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் போடாமல் சென்ற மணல் லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கியும், தார்பாய் போர்த்திய பிறகு லாரியை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இந்த வாகன சோதனை தொடர்ந்து பரமத்திவேலூர் வட்டார பகுதியில் நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
- நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்
- அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் ஜி.லட்சுமிபிரியா ஆய்வு செய்தார்.
குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, சுண்ணாம்பு பேட்டை பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் தங்கம்நகர் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திடக்கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன்ஜெயக்குமார், உதவி கலெக்டர் (வேளாண்மை) வெங்கடேசன், துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் பானுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் நகர மன்றதலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை உள்பட பலர் உடனிருந்தனர்.
- கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது.
- ரேஷன் கடை கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையை இன்று காலை கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீரென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ரேஷன் கடை களில் இருந்த பொருட்களும், அரசு பதிவேட்டில் குறிப் பிடப்பட்டிருந்த பொருட் களின் விபரமும் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.
பின்னர் பொது மக்களுக்கு எந்தவித குறை களும் இல்லாமல் அரசு நிர்ணயித்தபடி அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ரேஷன் கடை கட்டி டங்களை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து விவ சாயிகளின் இடுபொருட்கள் மற்றும் டிராக்டர்களை பார்வையிட்டார். அப்போது கடலூர் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அலுவலர் உதய குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
படம்கடலூர் சிங்கிரிகுடி ரேஷன் கடையை கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
- வருகை பதிவேடு குறித்து ேசாதனை
- சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவ மனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பிறகு சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதிக்கு சென்று மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.
இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர் சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியா ளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- மழை காலங்களில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது
- கழிவறையை பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாது நிலை இருந்து வருகிறது.
இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
இன்று பெருங்கடப்புதூர் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் பருவதம் பூண்டி கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி கட்டிடம் பழைய கட்டிடம் மேலும் ஒடுகளால் ஆன கட்டிடத்தின் ஓட்டின் மீது மர இலைகள் அதிக அளவில் இருந்ததால் மழை நீர் எப்படி கீழே வரும் இப்படி இருந்தால் மழை காலங்களில் மழை நீர் ஒழுகும்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது பள்ளி மாணவர்களை அழைத்து மதியம் உணவு எப்படி இருந்தது என்றும் எந்த வகையான சாதம் வழங்கப்பட்டது.
முட்டைகள் வழங்கபட்டதா என பல்வேறு கேள்விகளை மாணவர்களிடம் நேரடியாக கேட்டார். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறை சரியான முறையில் இல்லை என்று குற்றம் சாட்டினர். அதையும் ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் ஆய்வின் போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் பலர் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்