என் மலர்
நீங்கள் தேடியது "officials suspended"
- போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.
- மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார்.
சென்னை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முககவசம், கையுறை போன்ற மருத்துவப் பொருட்கள், அலுவலக கவர்கள், எழுதுபொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதின்றங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார். தற்போது அவர், புதுக்கோட்டை மத்திய சிறையில் சூப்பிரண்டாக உள்ளார். அதேபோல், மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்த கண்ணன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் சூப்பிரண்டாகவும், மதுரை மத்திய சிறையில் நிர்வாக அதிகாரியாக இருந்த தியாகராஜன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாகவும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- பள்ளி வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு.
- கல்வி அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்டு.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நென்னல் மண்டலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்யும் போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்தபடி பாடம் கவனிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியானது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாவட்ட கலெக்டர் குமார் தீபக் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேற்கூறையில் கசிவு இருப்பதை கண்டனர். மேலும் அந்த பள்ளியில் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் இருந்தாலும் கூரையில் கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை வேண்டுமென்றே அமர வைத்து குடைபிடித்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக நென்னல் மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.
அம்மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டிய ராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன் குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast