என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oil guard"

    • இங்குள்ள உற்சவர்களுக்கு தான் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • ஆடியில் அவதரித்த ஆண்டாள் நீலமேகப் பெருமாளுடன் ஊஞ்சல் சேவை சாதித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணா ற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் தஞ்சை மாமணிக்கோவில் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள அனைத்து மூலவர்களும் சுதை வடிவில் இருப்பதால் இங்குள்ள உற்சவர்களுக்கு தான் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒன்றாக திகழும் நீலகமேகப் பெருமாள் கோவிலில் இன்று காலை மூலவருக்கு தைலக்காப்பு சேவை நடந்தது. இன்று முதல் தொடந்து 45 தினங்கள் தைலக்காப்பு நடைபெறும். இந்த தினங்களில்

    திருமுகமண்டல தரிசனம் மட்டும் தரிசிக்கலாம்.

    முன்னதாக இந்த கோவிலில் நேற்று ஆடி 2-ம் வெள்ளி கிழமையை முன்னிட்டு ஆடியில் அவதரித்த ஆண்டாள் நீலமேகப் பெருமாளுடன் ஊஞ்சல் சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் ஆண்டாளையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

    ×