என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Olaf Scholz"
- தற்போது 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்
- நம் நாட்டு சட்டங்களை மதித்தவர்கள் இனி நம் நாட்டினர் என்றார் ஓலாப்
ஜெர்மன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதா, அந்நாட்டில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
நேற்று, ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா, 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உறுப்பினர்களில் 23 பேர் வாக்களிக்கவில்லை.
தற்போது ஜெர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த மசோதா சட்டமானால், ஜெர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
மேலும், இரட்டை குடியுரிமை இனி அனுமதிக்கப்படும். ஜெர்மனியில் தற்போது வரை இரட்டை குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் புதிய சட்டம் குறித்து அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், "பல தலைமுறைகளாக ஜெர்மனியில் வசித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்களுக்கு உதவ இந்த புதிய குடியுரிமை சட்டம் பயனளிக்கும். பல தசாப்தங்களாக எங்கள் நாட்டு சட்டதிட்டங்களை மதித்து நடந்த பல அயல்நாட்டினர்கள், இனி நம் நாட்டினர்கள்" என தெரிவித்தார்.
அந்நாட்டு ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெய்ர் (Frank-Walter Steinmeier) இம்மசோதாவில் கையெழுத்திட்டதும், இது சட்டமாகி விடும்.
அயல்நாட்டினர் குடியுரிமை பெற ஜெர்மன் முன்னோர்களின் வம்சமாக தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது வரை அங்கு இருந்து வந்தது.
எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், இச்சட்டம், ஜெர்மன் குடியுரிமையை மலிவாக்கி விடும் என கூறி எதிர்த்தனர்.
- உலகம் வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது என்றார் ஒலாப்
- உலகெங்கிலும் மக்கள் ஜெர்மனியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் ஒலாப்
புத்தாண்டையொட்டி ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
பல துன்பங்கள்; பெரும் ரத்த சேதம். மின்னல் வேகத்தில் நமது உலகம் முன்பை விட வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது. ரஷிய-உக்ரைன் போர், அதிகரிக்கும் எரிபொருள் விலை, ரஷியாவினால் ஏற்படுத்தப்பட்ட எரிவாயு தடை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பல கவலையளிக்கும் நிகழ்வுகள். ஆனால், ஜெர்மனியர்களான நாம் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து விடுவோம்.
விலைவாசி குறைந்துள்ளது. ஊதியம் மற்றும் பென்சன் உயர்ந்துள்ளது. எரிபொருள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் மேல் வரிவிதிப்பு குறைந்துள்ளது.
போக்குவரத்திலும், பசுமை எரிசக்தியிலும் அரசு முதலீடு செய்து வருகிறது.
நாட்டை முன்னே கொண்டு செல்ல மக்கள் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மக்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.
இவ்வாறு ஒலாப் கூறினார்.
- ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
- ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பெர்லின்:
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது.
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார். இந்தப் பயணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். இந்த முக்கிய விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின், நாடு திரும்பிய அவர் இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்று நடக்கக்கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
- ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் டெல்லியில் சாலையோர கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
- அந்தக் கடைக்காரர்களுடன் சேர்ந்து அதிபர் ஸ்கால்ஸ் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லி வந்தடைந்தார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் வந்துள்ளனர்.
ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அதன்பின், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என பிரதமர் மோடி பேசினார். இந்தச் சந்திப்பில், இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ஜெர்மன் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
சுவை மிகுந்த ஒரு கப் தேநீரை குடிக்காமல் இந்தியாவை நீங்கள் எப்படி அனுபவிக்க முடியும்? ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை டெல்லியின் சாணக்யாபுரி பகுதியின் சாலையோரத்தில் உள்ள எங்களது விருப்பத்திற்குரிய தேநீர் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்றோம்.
அந்தக் கடையில், அதிபர் ஸ்கால்ஸ் ஒரு தேநீர் வாங்கி அருந்திய காட்சிகளும், உடன் ஜெர்மனி தூதர் நிற்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதன்பின்னர் தேநீர் கடைக்காரர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் குழு புகைப்படம் ஒன்றும் எடுத்துக் கொண்டார்.
- ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
- டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:
இந்தியா-ஜெர்மனி இடையே அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பு உருவாக்கிய பிறகு முதல் முறையாக தனிநபர் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இன்று (சனிக்கிழமை) காலை இந்தியா வருகிறார். அவரது இந்த 2 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
டெல்லி வந்திறங்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிலும் ஒப்பந்தங்கள் கைமாறப்படுகின்றன. அத்துடன் கூட்டாக அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் வர்த்தக சந்திப்பு ஒன்றில் ஓலாப் ஸ்கோல்ஸ் பங்கேற்கிறார். பிற்பகல் ராஜ்காட் செல்லும் ஜெர்மனி பிரதமர், அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசுகிறார்.
தனது 2-வது நாள் (26-ம்தேதி) பயணத்திலும் ஜெர்மனி பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அன்று காலையில் பெங்களூரு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். பின்னர் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் அவர் ஜெர்மனி திரும்புகிறார்.
பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமரும் கடந்த ஆண்டு 3 முறை சந்தித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்தியாவும் ஜெர்மனியும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை பகிர்ந்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக ஜெர்மனி உள்ளது. இந்தியாவின் முதல் பத்து உலக வர்த்தக நட்பு நாடுகளில் தொடர்ச்சியாக ஜெர்மனியும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமரும் கடந்த ஆண்டு 3 முறை சந்தித்து இருந்தனர்.
- இந்தியாவும் ஜெர்மனியும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை பகிர்ந்து வருகின்றன.
புதுடெல்லி :
இந்தியா-ஜெர்மனி இடையே அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த அமைப்பு உருவாக்கிய பிறகு முதல் முறையாக தனிநபர் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் நாளை (சனிக்கிழமை) காலை இந்தியா வருகிறார். அவரது இந்த 2 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளன. அந்தவகையில் டெல்லி வந்திறங்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிலும் ஒப்பந்தங்கள் கைமாறப்படுகின்றன. அத்துடன் கூட்டாக அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் வர்த்தக சந்திப்பு ஒன்றில் ஓலாப் ஸ்கோல்ஸ் பங்கேற்கிறார். பிற்பகல் ராஜ்காட் செல்லும் ஜெர்மனி பிரதமர், அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார்.
தனது 2-வது நாள் (26-ந்தேதி) பயணத்திலும் ஜெர்மனி பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அன்று காலையில் பெங்களூரு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் அவர் ஜெர்மனி திரும்புகிறார்.
பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமரும் கடந்த ஆண்டு 3 முறை சந்தித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் ஜெர்மனியும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை பகிர்ந்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக ஜெர்மனி உள்ளது. மேலும் இந்தியாவின் முதல் பத்து உலக வர்த்தக நட்பு நாடுகளில் தொடர்ச்சியாக ஜெர்மனியும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அரசுமுறை பயணமாக ஜெர்மனி பிரதமர் இந்தியா வர உள்ளார்.
- 25-ம் தேதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.
புதுடெல்லி:
ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ். இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகிறார். வரும் 25-ம் தேதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
ஒலப் ஸ்கோல்ஸ் 26-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜெர்மனி - இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெற உள்ளது. இருநாட்டு தொழில்துறை தலைவர்கள், தொழிலதிபர்களுடன் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜெமனி பிரதமர் ஸ்கோல்ஸ் கலந்துரையாட உள்ளனர். 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு 26-ம் தேதி இரவு ஒலப் ஸ்கோல்ஸ் ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்