search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old age home"

    • பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
    • சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 9 ஆண்கள், 25 பெண்கள் உள்பட 34 ஆதரவற்றவர்கள் உள்ளனர். அந்த காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' தேவை என்று மாவட்ட சமூகநலத்துறை மூலமாக இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரத்திற்கு தெரிய வந்தது.

    இதையடுத்து காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' வாங்கி கொடுக்க இந்திராசுந்தரம் முடிவு செய்தார். இதன்படி ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 'வாட்டர் ஹீட்டரை' மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.

    அப்போது அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகி சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
    • எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

    சென்னை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் கூறி உள்ளது.

    இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

    முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு கூறியுள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது.

    சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

    அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    • ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது.
    • உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் முதியோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில், ரூ.2.15 லட்சம் நிதி திரட்டி தானம் வழங்கினர்.

    தங்களது இந்த செயலால் முதியோர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை அறிந்துகொண்டனர். மேலும், உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் திரட்டிய நிதி 600 முதியோர் இல்லங்களை பராமரித்து வரும் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்லங்களின் பிரதி நிதி ரேச்சல் சாம்சனிடம் வழங்கப்பட்டது. நிதி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் 2007ம் ஆண்டு முதல் தொடங்கி

    நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் நிதி வழங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

    • முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த மூதாட்டிக்கு்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
    • அவரது மகள் காயத்ரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி விஜயகுமாரி (வயது60). இவருக்கு காயத்ரி என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ராஜகுமாரி நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தார். அங்கு அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி இறந்து விட்டார். இது குறித்து அவரது மகள் காயத்ரி மேலப்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×