என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old woman death"
- 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார்? என விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில்வே நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாரா தவிதமாக மூதாட்டி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிசிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவ ரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போ லீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார் ? எந்த ஊர் ? என்ற விசாரித்து வருகின்றனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.
- பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடியில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் அருகில் சித்தானங்கூர் தனியார் ஆன்மீக மையம் அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? யாரேனும் இவரை கொலை செய்து விட்டு இங்கே போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புல் அறுக்க முயன்ற இடத்தில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது.
- விளைநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மின்வேலி அமைத்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ்சரகம் திருவக்கரை அருகே உள்ள தேனிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. அவரது மனைவி நாகவள்ளி (வயது 60). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றார். இரவு நேரமாகியும் நாகவள்ளி வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் விளைநிலம் நோக்கி சென்றனர். அப்போது நாகவள்ளி பிணமாக கிடந்தார். புல் அறுக்க முயன்ற இடத்தில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது. எனவே அந்த விளைநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மின்வேலி அமைத்துள்ளார். இதை கவனிக்காமல் நாகவள்ளி தொட்டதால் மின்சாரம் தாக்கி பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்தனர். இறந்துபோன நாகவள்ளி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
வாலாஜா:
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடந்து வருகிறது.
இந்நிலையில் வாலாஜா அருகே உள்ள அனந்தலை குளத்துதெருவை சேர்ந்தவர் துளசி (வயது 80). இவர் இன்று அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி நடு நிலைபள்ளி மையத்தில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றார்.
வாக்குசாவடி மையத்தின் உள்ளே சென்ற போது திடீரென மயங்கி விழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இளங்கடை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இடலாக்குடி உதிரம் பட்டியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவரது மனைவி இசக்கியம்மாள் (60), சுதா (45) ஆகிய இருவரும் ஆட்டோவில் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து இசக்கியம்மாள், சுதா, ஆட்டோ டிரைவர் மனோகரன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
மனோகரன், சுதா இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
பல்லடம்:
பல்லடம் செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் பூர்ணம்மாள் (வயது 65). நேற்று இரவு இவர் அருகில் உள்ள ஓட்டலுக்கு புறப்பட்டார். ஓட்டலுக்கு செல்ல சாலையை கடக்கும் போது கரடிவாவியில் இருந்து வந்த வேன் பூர்ணம்மாள் மீது மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூர்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது80). நேற்று மதியம் இவர் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமிதரிசனம் செய்வதற்கு முன்பு கோவில் குளத்தில் படிக்கட்டில் இறங்கி கால் கழுவ சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கோவிந்தம்மாள் குளத்தில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய கோவிந்தம்மாள் சிறிது நேரத்தில் குளத்தில் பிணமாக மிதந்தார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் கோவிந்தம்மாள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலயய்ன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செலவராஜ், ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43). இவரது தாய் கிருஷ்ணம்மாள் (64). இவர் நேற்று மாலை அய்யாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் முதலே புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து விளைநிலத்தில் இருந்த கிருஷ்ணம்மாள் மீது மின்னல் தாக்கியது.
இதில் அவர் முகம் கருகிய நிலையில் கீழே சாய்ந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் நூற்பாலை அருகே சம்பவத்தன்று இரவு 70-வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மூதாட்டியை அந்த வழியாக வந்த ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தைவேல் (35) என்பவர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு மூதாட்டியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்