என் மலர்
நீங்கள் தேடியது "oldman died"
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகில் உள்ள நடுக்கோட்ைடயை சேர்ந்தவர் சேகர் (வயது58). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று தேனி மெயின்ேராடு எஸ்.எஸ்.புரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அவரது மகள் சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
- துணி துவைக்கும் போது சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பேரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80). இவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை ப ார்த்த அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி இறந்த நிலையில் கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது59). தொழிலாளி. இவரது மகன் மனோஜ் (28).
- பாக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது59). தொழிலாளி. இவரது மகன் மனோஜ் (28).
தந்தை-மகன் இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் பகுதியில் வந்த போது எதிரே சங்கரன்கோவில் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட பாக்கியசாமி சம்பவ இடத்திலேயே பலியா னார். மனோஜ் படுகாய மடைந்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற மானூர் போலீசார் மனோஜை மீட்டு நெல்லை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.