search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on small grain production"

    • 40 விவசாயிகள் உள் மாநில பயிற்சிக்கு உழவன் செயலி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
    • இதில் அவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் சென்னி மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னிமலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் குட்ட பாளையம் குப்பிச்சி பாளையம் மற்றும் இதர வருவாய் கிராமங்களில் இருந்து 40 விவசாயிகள் உள் மாநில பயிற்சிக்கு உழவன் செயலி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்க திருவண்ணாமலை மாவட்டம் அத்தியேந்தலில் சிறுதானிய மகத்துவ மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இதில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் புதிய ரகங்கள் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான எந்திரங்கள் குறித்து தலைவர் பேரா சிரியர் வைத்தியலிங்கன் மற்றும் உதவி பேராசிரி யர்கள் விரிவாக எடுத்து கூறினர்.

    மேலும் விவசாயிகள் வயல்களில் பயிரிட்டுள்ள சிறுதானிய பயிர்களை நேரிடையாக கண்டனர். இதில் அவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் 50 கிலோ சிறுதானிய விதைகளை வாங்கினர். அதை தங்கள் வயல்களில் இந்த வருடம் பயிரிட உறுதி அளித்தனர்.

    மேலும் விவசாயிகள் காமாட்சி அம்மன் சிறுதானிய உற்பத்தி நிறுவனத்தின் சிறுதானிய மதிப்புகூட்டல் நிறுவனத்தை பார்வையிட்டு விபரங்களை கேட்ட றிந்தனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் சதிஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×