என் மலர்
நீங்கள் தேடியது "ONGC Company"
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், கருப்பூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக குழாய்கள் பதிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் இரவு இரும்பு குழாய்களில் தீ வைத்தனர். இதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 20 ராட்சத இரும்பு குழாய்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.
இதேபோல் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் இருந்த சிமெண்டு மூட்டைகளை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்று நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் பின் வருமாறு:-
முத்துப்பேட்டை அருகே உள்ள மங்கலநாயகி புரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக குழாய் பதிக்கும் வேலை நடைபெறஉள்ளது. இதற்காக கூடாரம் அமைக்கும் பணி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அங்குள்ள கூடாரத்தில் தீ பிடித்து மளமளவென எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு வேலை பார்க்கும் வட மாநில இளைஞர்கள் உடனே திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கூடாரத்தில் இருந்த 1500 சிமெண்ட் மூட்டைகள் மற்றும் ஒருமோட்டார் சைக்கிள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் எரிந்து போனதால் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவன குழாய் அமைக்கும் இடத்தில் உள்ள கூடாரத்தில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? மர்ம கும்பல் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ONGC
திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி முக்குளத்தில் ஒன்ஜிசி நிறுவனம் சார்பில் விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் வெள்ள குடியில் தொடங்கி அடியகமங்கலம் வரை பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய்கள் பதிக்கப்பட்டு எண்ணெய் எடுத்து செல்லும் போது கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருவதால் குழாய் பதிக்கும் பணிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக முசகுளக் கிராமத்தில் குழாய் பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனை அறிந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், குழாய் பதிப்பதால் விளைநிலங்களை பாதிக்கும் என கூறி குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பணிகள் மேற்கொண்டிருந்த ஊழியர்கள் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
இது தொடர்பாக கிராம மக்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews