என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ooty hill train"

    • ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    நீலகிரி:

    ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. மலை ரெயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    • கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது.
    • நாளை முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் ஏழு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.

    கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் உதகை- மேட்டுப்பாளையம் மலை ரெயில் நாளை முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வகையில் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இந்த மலை ரெயில் அதிக அளவில் விரும்பி பயணம் மேற்கொள்வார்கள்.

    ×