search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operates"

    • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு காலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அதிகமான மாணவி, மாணவர்கள் செல்கின்றனர்.
    • புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடி சென்றாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவ-மாணவிகள் பயணம் செய்து வந்தனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு காலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அதிகமான மாணவி, மாணவர்கள் செல்கின்றனர்.

    இதனால் 8 மணி முதல் 8.30 வரை 3 பேருந்துகள் ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடி சென்றாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவ-மாணவிகள் பயணம் செய்து வந்தனர்.

    எனவே புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு பஸ் இயக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனால் கூடுதல் பஸ் இயக்கக்கோரி புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம், ரெடிமேட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் புதிய பஸ் இயக்கும்படி அரசு போக்கு வரத்து கழகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஓட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ. இடமும் தெரிவித்து இருந்தனர்.

    இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் செய்தி பிரசுரம் ஆகி இருந்தது. இதனையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று காலை புதிய நகரப் பேருந்தை புதியம்புத்தூரில் இருந்து இயக்க ஏற்பாடு செய்தனர்.

    புதிய பஸ் இயக்கும் நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்செல்வி குழந்தை வேல், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலை வர் வேலாயுதசாமி, புதியம் புத்தூர் ரெடிமேட் உற்பத்தி யாளர் சங்கச் செயலாளர் கண்ணன், தி.மு.க. வர்த்தக அணி முத்துக்குமார், சம் லிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, ரவி ஜெயபிரகாஷ், முத்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.

    ×