என் மலர்
நீங்கள் தேடியது "Opinions"
- தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
- மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாநகரை அழகுபடுத்துவது தொடர்பாக மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தஞ்சை மாநகருக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் தஞ்சை மாநகரை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி புதிய பொலிவை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு துறைகளின் வல்லுனர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைத்துறை வல்லுனர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
அவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறினர்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தின. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் கூறின. சில கட்சிகள் தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்தின.
அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதா? தள்ளிவைப்பதா? என்பதை அறிவிப்பார். #TiruvarurByelection