என் மலர்
நீங்கள் தேடியது "Ottapidaraj"
- தொடக்க விழாவிற்கு நீர்வள ஆதாரத்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மலட்டார் ஓடையின் குறுக்கே அணைக்கட்டு கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே முள்ளூர் பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமத்தில் உள்ள மலட்டார் ஓடையின் குறுக்கே ரூ.4 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுவதற்கான தொடக்க விழா நடந்தது.
தொடக்க விழாவிற்கு நீர்வள ஆதாரத்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மலட்டார் ஓடையின் குறுக்கே ரூ.4 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து முள்ளூர் பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம், முள்ளூர், அய்யர்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 277 வீடுகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் முத்துக்குமாரபுரம், பட்டியூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டிடப்பணிகள், கீழசெய்தலை கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் ரேசன்கடை கட்டிட பணிகளையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜ், உதவி பொறியாளர் விக்னேஷ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் ராமசாமி, கவுரி கருணாகரன், சண்முகையா, சந்தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.