என் மலர்
நீங்கள் தேடியது "ottapidaram"
- வடக்கு ஆவரங்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்
- சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவரங்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவரது மனைவி பேச்சியம்மாள் (36). மாரியப்பன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி பேச்சியம்மாள் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் கணவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவே அவர் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்திருக்கிறது.
- இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது.
புதியம்புத்தூர்:
தமிழகம் முழுவதும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்திருக்கிறது. இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது. நேற்று ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள சங்கம் பட்டி குலசேகர நல்லூர், தெற்கு ஆரைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று யூனியன் சேர்மன் ரமேஷ் பார்வையிட்டார். அவருடன் கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டை சாமி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றனர்
- ஓட்டப்பிடாரம் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த மின்தடை 22-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த மின்தடை 22-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய பகுதிகளான குறுக்கு சாலை, புதியம்புத்தூர், குலசேகர் நல்லூர், கொம்பாடி, தளவாய்புரம், சாமி நத்தம், சில்லாநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், பாஞ்சா லங்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும்,
ஒட்டநத்தம் மின் நிலைய பகுதிகளான வாஞ்சி மணியாச்சி, பாறை கூட்டம், பூவாணி, அக்காநாயக்கன் பட்டி, தென்னம்பட்டி, வேப்பங்குளம்,மருதன் வாழ்வு, பரிவள்ளிக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும். இத்தகவலை தூத்துக்குடி நகர்புறம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- காற்றாலை மற்றும் சோலார் பேனல் அமைக்க பயன்படும் உபகரணங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ளது.
- திருட்டுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குதிரை குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இடத்தில் காற்றாலை மற்றும் சோலார் பேனல் அமைக்க பயன்படும் உபகரணங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ளது.
அங்கு குதிரைக்குளத்தை சேர்ந்த மதியழகன் (வயது 45) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் அங்கு வைக்கப்படும் காப்பர் வயர்கள் அடிக்கடி திருட்டு போய் உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் அருண்குமார் ஆய்வு நடத்திய போது அங்கிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கடந்த 14-ந் தேதி பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் காவலாளி மதியழகன், கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு இந்த திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய வேனையும் அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்து மாரியப்பனுக்கும், மாயகிருஷ்ணனுக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது.
- 4 பேரும் சேர்ந்து எட்டப்பனை தாக்கி கீழே தள்ளி அவரை வெட்ட முயற்சித்துள்ளனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் எட்டப்பன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மகன் முத்து மாரியப்பன் (24) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (20) என்பவருக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துமாரியப்பன் தற்போது ஜெயிலில் உள்ளார். இதனால் முத்துமாரியப்பனை ஜாமினில் வெளியே எடுக்கும் முயற்சியில் அவரது தந்தை எட்டப்பன் வக்கீலை பார்த்து முயற்சி செய்து வந்துள்ளார்.
இதை அறிந்த குலசேகர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்,அவரது தந்தை முருகன் (50), கப்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜ் (46) உள்பட 4 பேர் குலசேகர நல்லூர் வடக்கு தெருவில் வைத்து அங்கிருந்த எட்டப்பனை தாக்கி கீழே தள்ளி வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது எட்டப்பன் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து எட்டப்பன் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட மாயகிருஷ்ணன், முருகன், ரவிராஜ் மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
- சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
புதியம்புத்தூர்:
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, உதவி பொறியாளர் பொதுப்பணித்துறை அன்புராஜ், மருத்துவ அலுவலர் நியாஸ், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து, ஹரி பாலகிருஷ்ணன், ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, ஒட்டநத்தம் கிளை செயலாளர், கொண்டல் சுப்பையா, மகளிரணி காமினி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுநர் அதிசயமணி, மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் குடியிருப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
- தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா ஒட்டநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் செலவில் செவிலியர்கள் குடியிருப்பு, தருவைகுளம், மருதன்வாழ்வு ஆகிய கிராமங்களில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய நடந்த விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு பெண் களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாக தெரிவித்தால் கூட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்றார். விழாவில் யூனியன் தலைவர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் அன்புராஜ், ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நியாஸ், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், சரிதா, ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுநர் அதிசயமணி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து உட்பட மருத்துவ ஊழியர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் குறுக்குசாலையில் நடந்தது.
- அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை என்று -கனிமொழி எம்.பி. கூறினார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு பதவி ஏற்ற பிறகு இப்பகுதியில் ஆசியாவில் மிகப்பெரிய பர்னிச்சர் பூங்காவும், டைட்டல் பார்க்கும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவநீதகண்ணன், அன்புராஜன், அவைத் தலைவர் இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அந்தோணி ராஜ் வழக்கம் போல் பி. துரைச்சாமிபுரம் கிராமம் அருகே உள்ள ஒரு கிணற்றில் அந்தோணிராஜ் புறா குஞ்சு எடுப்பதற்காக கிணத்தில் இறங்கியுள்ளனர்.
- அப்போது மனைவி கிணற்றுக்குள் பார்த்தபோது கணவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது35). இவரது மனைவி மாரிச்செல்வி இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.
புறா குஞ்சு
அந்தோணி ராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மற்ற நேரத்தில் கிணற்றில் புறா குஞ்சு எடுத்து உணவு சமைத்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் பி. துரைச்சாமிபுரம் கிராமம் அருகே உள்ள ஒரு கிணற்றில் அந்தோணிராஜ் புறா குஞ்சு எடுப்பதற்காக கிணத்தில் இறங்கியுள்ளனர்.அப்போது அங்கு நிலைத்தடுமாறி கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ள நிலையில், நீச்சல் தெரியாததால் பரிதாபமாக உயிரிழந்தார்
கிணற்றில் தவறி விழுந்து
நீண்ட நேரம் ஆகியும் அந்தோணி ராஜ் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றுள்ளனர். ஒரு கிணறு அருகில் அவருடைய காலனி கிடந்துள்ளது. அப்போது மனைவி கிணற்றுக்குள் பார்த்தபோது கணவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார், ஒட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமையில் நடந்தது.
- அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் அரசுத்துறை அலு வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவர்ன கிரியைச் சேர்ந்த கோவில் பிள்ளை என்ற விவசாயி பேசியதாவது:-
ஓட்டப்பிடாரம் தாலுகா முழுமைக்கும் மழை சரிவர பெய்யவில்லை. எனவே ஓட்டப்பிடாரம் தாலுகாவை வறட்சி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். உளுந்து, பாசிப்பயறு, கம்பு போன்ற பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்.
மானாவாரி விவசாய நிலங்களில் காற்றாலை கள் அதிகளவில் அமைக்கப்படு வதால் விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. காற்றாலைக்கு அனுமதி வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும்.பெரிய குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு உள்ள அனுமதியை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான ஆழத்திற்கு வண்டல் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிலத்தடி நீரால் பாதிப்பு
மற்றொரு விவசாயி பேசுகையில், கவர்னகிரி பகுதியில் நிலத்தடி நீரின் தன்மையால் பலர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே கவர்னகிரிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் தாசில்தார் நிசாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்
- கொல்லங்கிணறு ஊராட்சியில்பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- அடிக்கல் நாட்டு விழாவிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, உயர்நிலை பள்ளியில் பெண்கள் கழிவறை, மந்திகுளம் ஊரணியில் தடுப்புச்சுவர், வாறுகால் மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கவர்னகிரியில் சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் இன்று நடக்கிறது.
- இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மாலையில் குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் இருந்து வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், அருள், வசந்தராஜ், சிவசுப்பு, சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டப்பிடாரத்தை சுற்றியுள்ள கவர்னகிரி செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.