என் மலர்
நீங்கள் தேடியது "our school project"
- ‘‘நமது பள்ளி திட்டம்’’ குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
- விரைவில் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம்
முதல்வரின் நமது பள்ளி திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநகராட்சியின் மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். கவுன்சிலர் உசிலை சிவா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவகாமி வரவேற்றார்.
திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மேஜை, நாற்காலி, கட்டிடம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. விரைவில் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் முருகேசன், தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினர் நெடுமாறன் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான நெடுமாறன், இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.